டிக்டாக்கிற்கு பதிலாக புதிய சில்5 (chill5) ஆப்! தமிழக இளைஞர்கள் அதிரடி!

இந்தியா சீனா எல்லைப் பகுதியில் உருவான மோதல் காரணமாக இந்தியா முழுவதும் சீன பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் கோரிக்கை வலுத்து வருகிறது. மத்திய அரசும் பாதுகாப்பு கருதி ஹலோ, டிக்டாக் உட்பட 59 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதித்துள்ளது. தற்போது இதற்கு இணையானவும் இதற்கு மாற்றாகவும் பல செயலிகள் களமிறக்கப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக டிக்டாக்கின் இடத்தை பிடிக்க இந்தியாவில் பல செயலிகளும் முனைந்து வருகின்றன. இந்நிலையில் திருப்பூரைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் இணைந்து
 

டிக்டாக்கிற்கு பதிலாக  புதிய சில்5 (chill5)  ஆப்! தமிழக இளைஞர்கள் அதிரடி!ந்தியா சீனா எல்லைப் பகுதியில் உருவான மோதல் காரணமாக இந்தியா முழுவதும் சீன பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் கோரிக்கை வலுத்து வருகிறது.

மத்திய அரசும் பாதுகாப்பு கருதி ஹலோ, டிக்டாக் உட்பட 59 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதித்துள்ளது. தற்போது இதற்கு இணையானவும் இதற்கு மாற்றாகவும் பல செயலிகள் களமிறக்கப்பட்டு வருகின்றன.

அதிலும் குறிப்பாக டிக்டாக்கின் இடத்தை பிடிக்க இந்தியாவில் பல செயலிகளும் முனைந்து வருகின்றன. இந்நிலையில் திருப்பூரைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் இணைந்து டிக்டாக்கிற்கு மாற்றான சில்5 (chill5) என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளனர்.

திருப்பூரில் நண்பர்கள் குழு இணைந்து இந்த ஆப்பை வடிவமைத்துள்ளனர். இந்த செயலியில் டிக்டாக் போலவே வீடியோ பதிவேற்றம், பரிமாற்றம் என பல அம்சங்களைப் பெற்றுள்ளன.

சென்ற வாரம் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஆப்பை தற்போது வரை 1000க்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்திருப்பதாகவும் விரைவில் லட்சத்தை எட்டும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த ஆப்பினை உபயோகிப்பவர்களின் ரகசியங்கள் சரியான முறையில் பாதுகாக்கப்படும் எனவும் நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.

A1TamilNews.com

From around the web