நான் சன்னியாசியாகவே விரும்பினேன்! -பிரதமர் நரேந்திர மோடி

டெல்லி: பிரதமர் மோடியை பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் பேட்டி கண்டார். டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் இந்த பேட்டி நிகழ்வு நடைபெற்றது. ‘அரசியல் அல்லாத பேட்டி’ என்று சொல்லப்பட்ட இந்த பேட்டியின் போது பிரதமர் மோடி பல்வேறு சுவாரசிய தகவல்களையும் பகிர்ந்து கொண்டு உள்ளார். பிரதமர் மோடி பேட்டியின் போது கூறியதாவது: “சிறுவயதிலேயே நான் எனது தாயை விட்டு பிரிந்து வந்து விட்டேன். ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்று நினைத்தேன். வரலாறு
 

நான் சன்னியாசியாகவே விரும்பினேன்! -பிரதமர் நரேந்திர மோடிடெல்லி: பிரதமர் மோடியை பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் பேட்டி கண்டார். டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் இந்த பேட்டி நிகழ்வு நடைபெற்றது.

‘அரசியல் அல்லாத பேட்டி’ என்று சொல்லப்பட்ட இந்த பேட்டியின் போது பிரதமர் மோடி பல்வேறு சுவாரசிய தகவல்களையும் பகிர்ந்து கொண்டு உள்ளார். பிரதமர் மோடி பேட்டியின் போது கூறியதாவது:

“சிறுவயதிலேயே நான் எனது தாயை விட்டு பிரிந்து வந்து விட்டேன். ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்று நினைத்தேன். வரலாறு போற்றும் தலைவர்களின் சுயசரிதைகளை படிப்பதில் எனக்கு அதிக ஆர்வம் உண்டு.

எதிர்க்கட்சிகளில் எனக்கு பல நண்பர்கள் உள்ளனர். மம்தா பானர்ஜி ஒவ்வொரு ஆண்டும் 2 குர்தாக்கள் எனக்கு அனுப்புகிறார். இதேப்போல் ஷேக் ஹசீனா எனக்கு இனிப்புகள் அனுப்புவார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா எனக்கு மிக நெருங்கிய நண்பராவார். என் உடல் நலன் குறித்த கேள்விகளை கேட்டுக் கொண்டே இருப்பார். நான் 3 மணி நேரம் கூட உறங்குவதில்லை என்பதை அறிந்து என்னை அதிக நேரம் தூங்கச் சொல்லுவார்.

நான் ஒருபோதும் பிரதமராவேன் என நினைத்ததில்லை. ஏனென்றால் நான் மிகப்பெரிய அரசியல் பின்னணியுடன் வரவில்லை. சிறந்த சன்னியாசியாகவே ஆசைப்பட்டேன்.

நான் அனைவரிடமும் மரியாதையாகவும், கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ளும் தன்மையோடும்தான் இருப்பேன்.

என்னிடம் பணி புரியும் யாரிடமும் நான் கோபத்தைக் காட்டியதில்லை. எனது கோபத்தினை காட்ட வாய்ப்பே கிடைத்ததில்லை. எனவே மக்கள் என்னைக் கண்டு ஆச்சரியமடைகின்றனர். நான் கட்டுப்பாட்டுடன் இருப்பேன். ஆனால் அதிக கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.

நான் முதல்வரானபோது செய்த பணிகளில் எனக்கு கிடைத்த அனுபவம்தான், பிரதமரான போது பெரிதும் உதவியது.

நான் எம்எல்ஏ ஆவதற்கு முன்பு வரை என்னிடம் வங்கிக் கணக்கே கிடையாது. நான் குடும்பத்தை விட்டு இளம் வயதிலேயே வெளியேறிவிட்டேன்.

தீமையை விட நன்மைக்கு வலிமை அதிகம். எனவே எப்போதும் நேர்மறை எண்ணங்களுக்கே இடம் தருவேன்,” என்றார்.

 

From around the web