இந்திய வம்சாவளி நியோமி ராவ் அமெரிக்காவின் முக்கிய நீதிபதியாக பதவி ஏற்றார்!

வாஷிங்டன்: அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த இந்திய வம்சாவளி நியோமி ராவ், அமெரிக்காவின் முக்கிய நீதிமன்றங்களில் ஒன்றான வாஷிங்டன் டி.சி சர்க்யூட் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவியேற்றுள்ளார். ஒவ்வொரு மாநிலத்திலும் அமெரிக்க நீதிமன்றங்கள் உண்டு. மத்திய அரசின் எல்லைக்குட்பட்ட வழக்குகள் அங்கு விசாரிக்கப்படும். அந்த நீதிமன்றங்களுக்கு மேல் முறையீட்டு நீதிமன்றங்களும் நிலப்பரப்பு அடிப்படையில் எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் உண்டு. அந்த வகையில் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் டிசி பகுதிக்கான அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் அமெரிக்க டிசி சர்க்யூட் மேல்முறையீட்டு நீதிமன்றமாகும்.
 

இந்திய வம்சாவளி நியோமி ராவ்  அமெரிக்காவின் முக்கிய நீதிபதியாக பதவி ஏற்றார்!

வாஷிங்டன்: அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த இந்திய வம்சாவளி நியோமி ராவ், அமெரிக்காவின் முக்கிய நீதிமன்றங்களில் ஒன்றான வாஷிங்டன் டி.சி சர்க்யூட் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில்  நீதிபதியாக பதவியேற்றுள்ளார்.
 
ஒவ்வொரு மாநிலத்திலும் அமெரிக்க நீதிமன்றங்கள் உண்டு. மத்திய அரசின் எல்லைக்குட்பட்ட வழக்குகள் அங்கு விசாரிக்கப்படும். அந்த நீதிமன்றங்களுக்கு மேல் முறையீட்டு நீதிமன்றங்களும் நிலப்பரப்பு அடிப்படையில் எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் உண்டு. அந்த வகையில் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் டிசி பகுதிக்கான அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் அமெரிக்க டிசி சர்க்யூட் மேல்முறையீட்டு  நீதிமன்றமாகும்.  
 
சி.ஐ.ஏ, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட மத்திய அரசின் முக்கிய அமைப்புகள் தொடர்பான வழக்குகள் இந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்பதால், அமெரிக்க உச்சநீதிமன்றத்திற்கு அடுத்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த ப்ரெட் கேவனா-வை உச்சநீதிமன்ற நீதிபதியாக அதிபர் ட்ரம்ப் நியமித்தார். அதனால் அந்த இடம் காலியாக இருந்தது.
 
இந்திய வம்சாவளி நியோமி ராவ்-ஐ, டிசி சர்க்யூட் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக அதிபர் ட்ரம்ப் நியமித்தார். அதற்கான செனட் அவையின் ஒப்புதலும் கிடைத்தது. பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதி க்ளாரன்ஸ் தாமஸ் , நியோமி ராவ்-க்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். டிசி சர்க்யூட் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஏற்கனவே இந்திய வம்சாவளி ஸ்ரீ ஸ்ரீனிவாசனை அதிபர் ட்ரம்ப் நீதிபதியாக நியமித்துள்ளார்.
 
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குக் குடியேறிய பார்சி இன பெற்றோருக்கு டெட்ராய்ட் நகரில் பிறந்தார் நியோமி. அவருக்கு தற்போது வயது 45 ஆகும். கணவர் பெயர் அலன் லெஃப்கோவிஸ். நியோமியின் பெற்றோர்  ஸெரின் ராவ், ஜெஹாங்கிர் நெரியோஷங் ராவ் இருவரும் மருத்துவர்கள் ஆவார்கள். 
 
நியோமியின் பதவியேற்பில் அதிபர் ட்ரம்ப் கலந்து கொண்டு வாழ்த்தினார்.  “நியோமி மிகச் சிறந்த பெண்மணி. மிகவும் அருமையாக அவருடைய பணி சிறக்கும்,” என்று ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
நியோமி ராவின் பதவியேற்புக்குப் பிறகு அமெரிக்காவின் மிக முக்கியமான நீதிமன்றத்தில் இரண்டு இந்தியவம்சாவளியினர் நீதிபதிகளாக உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
 
– வணக்கம் இந்தியா

From around the web