ஃப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ்-க்கு கடிவாளம்! நெல்லை சரக டிஐஜி புதிய உத்தரவு!

சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் கொலை வழக்கில் ஃப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ்-ஐ சார்ந்தவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. அவர்களையும் விசாரிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு தரப்பினர் கோரிக்கை எழுப்பி வருகிறார்கள். இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார், சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகிய 5 பேரை அதிரடியாக கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர். ஃப்ரெண்ட்ஸ் ஆப் போலிசைச் சேர்ந்தவர்கள் சாத்தான்குளம் சம்பவம்
 

ஃப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ்-க்கு கடிவாளம்! நெல்லை சரக டிஐஜி புதிய உத்தரவு!சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் கொலை வழக்கில் ஃப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ்-ஐ சார்ந்தவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. அவர்களையும் விசாரிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு தரப்பினர் கோரிக்கை எழுப்பி வருகிறார்கள்.

இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார்,  சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன்,  முத்துராஜ்  ஆகிய 5 பேரை  அதிரடியாக கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.

ஃப்ரெண்ட்ஸ் ஆப் போலிசைச் சேர்ந்தவர்கள் சாத்தான்குளம் சம்பவம் குறித்து பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அவர்களில் இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை.  இந்த நிலையில், “காவல்துறையினர் பிரண்ட் ஆப் போலீசை பயன்படுத்த வேண்டாம் என்று  நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இதன் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை ஃப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸை சார்ந்தவர்களை பயன்படுத்த மாட்டார்கள் என்று தெரிகிறது.

A1TamilNews.com

From around the web