12ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் ‘நெல்’ ஜெயராமன்!

சென்னை: 9ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள ‘நெல்’ ஜெயராமன் பற்றிய குறிப்புகள் 12ம் வகுப்பு பாடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. பாரம்பரிய நெல் வகைகளை மீட்டு, விதைகளைப் பாதுகாத்து அதிக அளவில் பயிரிடச் செய்தவர் நெல் ஜெயராமன். தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் இதற்காகவே அர்பணித்துக் கொண்டவர். ஆண்டு தோறும் விதைத் திருவிழா நடத்தி விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருந்தவர். புற்று நோய் தாக்குதலினால் சமீபத்தில்மரணத்தை தழுவினார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து நெல் திருவிழாவை
 

சென்னை: 9ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள  ‘நெல்’ ஜெயராமன் பற்றிய குறிப்புகள் 12ம் வகுப்பு பாடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. 

பாரம்பரிய நெல் வகைகளை மீட்டு, விதைகளைப் பாதுகாத்து அதிக அளவில் பயிரிடச் செய்தவர் நெல் ஜெயராமன். தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் இதற்காகவே அர்பணித்துக் கொண்டவர். ஆண்டு தோறும் விதைத் திருவிழா நடத்தி விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருந்தவர்.  

புற்று நோய் தாக்குதலினால் சமீபத்தில்மரணத்தை தழுவினார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து நெல் திருவிழாவை நடத்த உதவுவதாக நெல் ஜெயராமனுக்கு வாக்கு கொடுத்து இருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம் நெல் ஜெயராமனின் வாழ்க்கைக் குறிப்புகள், பாரம்பரிய நெல் வகைகள் மீட்பு போன்றவைகள் பற்றி 12ம் வகுப்பு தாவரவியல் பாடப்புத்தகத்தில் சேர்த்து பெருமைப் படுத்தியுள்ளது. 

புகழ்பெற்ற தாவரவியல் அறிஞர்கள் நார்மன் இ போர்லாக், எம்.எஸ். சுவாமிநாதன் வரிசையில் நெல் ஜெயராமன் குறிப்பும் இடம் பெற்றுள்ளது.  நெல் ஜெயராமன் 9ம் வகுப்பு வரையிலுமே படித்தவர். 12 வகுப்பு பாடத்தில் இடம்பெற்றுள்ளது, அவருக்கு  சிறப்பு சேர்க்கும் வகையில் உள்ளது.

 

From around the web