2020ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

2020ஆம் ஆண்டில் நடைபெறும் நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே மாதம் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு இன்று முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இதற்கான கட்டணமானது, பொதுப் பிரிவினர் ஆயிரத்து 500 ரூபாயும், ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பினதங்கியவர்கள் ஆயிரத்து 400 ரூபாயும், எஸ்.சி,
 

2020ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!2020ஆம் ஆண்டில் நடைபெறும் நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்க‌லாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே மாதம் 3‌ ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு இன்று முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இதற்கான கட்டணமானது, பொதுப் பிரிவினர் ஆயிரத்து 500 ரூபாயும், ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பினதங்கியவர்கள் ஆயிரத்து 400 ரூபாயும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் 800 ரூபாயும் செலுத்த வேண்டும்.

ஜனவரி ஒன்றாம் தேதி வரை தேர்வுக்கா‌‌ன கட்டணத்தை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வின் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியாகும் என்றும் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 11மொழிகளில் தேர்வு நடத்தப்படும் எனவும் தேசி‌ய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

https://www.A1TamilNews.com

From around the web