சென்னையில் இரு முறை பெயில், மும்பையில் பாஸ்… ‘நீட் தேர்வு’ ஆள் மாறாட்ட அவலம்!

தேனி: சென்னையைச் சேர்ந்த உதித் சூர்யா என்ற மாணவன் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து வெற்றி பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த உதித் சூர்யா என்ற மாணவன் மீது புகார் எழுந்ததால், கல்லூரி முதல்வர் விசாரணை மேற்கொண்டார். உதித் சூர்யாவின் பதில்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால், காவல் நிலையத்தில் புகார் அளித்தார் முதல்வர். இதற்கிடையே உதித் சூர்யா தலைமறைவு ஆகிவிட்டார். அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. கல்லூரி சார்பில் 4
 

சென்னையில் இரு முறை பெயில், மும்பையில் பாஸ்…   ‘நீட் தேர்வு’ ஆள் மாறாட்ட அவலம்!

தேனி: சென்னையைச் சேர்ந்த உதித் சூர்யா என்ற மாணவன் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து வெற்றி பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த உதித் சூர்யா என்ற மாணவன் மீது புகார் எழுந்ததால், கல்லூரி முதல்வர் விசாரணை மேற்கொண்டார். உதித் சூர்யாவின் பதில்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால், காவல் நிலையத்தில் புகார் அளித்தார் முதல்வர்.

இதற்கிடையே உதித் சூர்யா தலைமறைவு ஆகிவிட்டார். அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. கல்லூரி சார்பில் 4 பேராசிரியர்கள் கொண்ட குழுவை நிர்வாகம் அறிவித்தது. முடிவில், பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளி வந்துள்ளது.

உதித் சூர்யாவின் தந்தை சென்னையில் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்தவர். மகனை மருத்துவராக்கி விட வேண்டும் என்ற கனவில் நீட் தேர்வுக்கு தயார் படுத்தியுள்ளார். சென்னையில் இரு முறை நீட் தேர்வு எழுதிய உதித் ஆர்யா தோல்வி அடைந்துள்ளார்.

பின்னர், ஒரு நீட் பயிற்சி மையம் மூலம் மும்பை சென்று நீட் தேர்வு எழுதி பாஸ் செய்துள்ளார். அதன் அடிப்படையில் தேனி மருத்துவக் கல்லூரியிலும் சேர்ந்துள்ளார் உதித் சூர்யா.

தீவிர விசாரணைக்குப் பிறகு, மும்பையில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியுள்ளது தெரிய வந்துள்ளது.  தந்தையும் மகனும் ஆள் மாறாட்டம் செய்ததை ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது.

உதித் சூர்யா மீதும் ஆள் மாறாட்டம் செய்த நபர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பயிற்சி மையத்தின் மூலம் மேலும் இத்தகைய முறைகேடுகள் நடந்துள்ளதா என்று காவல்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தமிழகத்தில் 12 வகுப்பில் கூடுதல் மதிப்பெண் பெற்றிருந்தாலும் ஏழை மாணவ மாணவிகளுக்கு, நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமல் போகிறது. அனிதா உட்பட பல இளம் தளிர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.

ஆனால், தமிழகத்திலேயே நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்த அவலமும் நடந்துள்ளது மிகவும் வேதனைக்குரியது. நீட் தேர்வின் நம்பகத் தன்மை குறித்த கேள்வியும் எழுந்துள்ளது.

– வணக்கம் இந்தியா

 
 

From around the web