பேட்ட ரஜினியின் வில்லனுக்கு நடந்துள்ள சோகத்தைப் பாருங்க!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தின் வில்லன் நடிகர் நவாசுதின் சித்திக்கின் தங்கை 8 வருடமாக கேன்சர் நோயுடன் போராடி டிசம்பர் மாதம் உயிரிழந்தார். 26 வயதே நவாசுதினின் தங்கை சியாமா தம்சி சித்திக்க்கு 18 வயதிலேயே கேன்சர் நோய் தாக்கியுள்ளது. கேன்சருடன் கடுமையாகப் போராடியும் அவரால் மீண்டு வர முடியவில்லை. மகள் இறந்த சோகம் நவாசுதின் சித்திக்கின் தாயாரை மிகவும் பாதித்து விட்டது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சொந்த ஊரான புதானாவில் வசித்து
 

பேட்ட ரஜினியின் வில்லனுக்கு நடந்துள்ள சோகத்தைப் பாருங்க!சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தின் வில்லன் நடிகர் நவாசுதின் சித்திக்கின் தங்கை 8 வருடமாக கேன்சர் நோயுடன் போராடி டிசம்பர் மாதம் உயிரிழந்தார்.

26 வயதே நவாசுதினின் தங்கை சியாமா தம்சி சித்திக்க்கு 18 வயதிலேயே கேன்சர் நோய் தாக்கியுள்ளது. கேன்சருடன் கடுமையாகப் போராடியும் அவரால் மீண்டு வர முடியவில்லை. மகள் இறந்த சோகம் நவாசுதின் சித்திக்கின் தாயாரை மிகவும் பாதித்து விட்டது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சொந்த ஊரான புதானாவில் வசித்து வரும் நவாசுதினின் தாயாருக்கு அடிக்கடி உடல்நலம் இல்லாமல் போய் விட்டது.

மகள் இறந்த சோகத்தை தாங்க முடியாத தாயாருக்கு இரண்டு தடவை Anxiety அட்டாக் ஏற்பட்டுள்ளது. மூச்சுத்திணறல், நெஞ்சுவலியுடன் மிகவும் அவதிப்பட்டுள்ளார். மார்ச் 23ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்ததால் நவாசுதின் உடனடியாகச் சென்று தாயாரைப் பார்க்க முடியவில்லை.

ஊரடங்கு சற்று தளரத் தொடங்கிய பிறகு கடந்தவாரம் சொந்த ஊருக்குச் சென்று தாயாரைக் கவனித்து வருகிறார். இது பற்றி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ள நவாசுதின், அரசுக் கட்டுப்பாடுகளை அனைத்தையும் பின்பற்றுகிறோம். வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளோம். எல்லோரும் பாதுகாப்புடன் இருங்கள் என்று கூறியுள்ளார். மே 15ம் தேதி சொந்த ஊருக்குச் சென்றடைந்தவர் மே 29ம் தேதி வரை வீட்டிலேயே தனிமைப் படுத்தப்பட்டுள்ளார்.

தாயாரைப் பார்ப்பதற்காக மும்பையிலிருந்து தனி வாகனத்தில் சகோதரர், சகோதரரின் மனைவியுடன் சொந்த ஊருக்குச் செல்லும் வழியில் 25 இடங்களில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதாக நவாசுதின் கூறியுள்ளார்.

பேட்ட ரஜினியின் வில்லனுக்கு நடந்துள்ள சோகத்தைப் பாருங்க!

இந்நிலையில் நவாசுதின் சித்திக்கின் மனைவி விவாகரத்து கேட்டு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மே 7ம் தேதி இமெயில் மற்றும் வாட்ஸ் அப் மூலம் அனுப்பட்டுள்ள நோட்டீஸில் விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் கோரியுள்ளார் நவாசுதினின் மனைவி ஆலியா. 2009ம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடந்தது. வக்கீல் நோட்டீஸில் உள்ளவைகள் பற்றி வெளியே சொல்ல முடியாது. ஆனால் நவாசுதினிடமிருந்து இன்னும் பதில் வரவில்லை என்று வழக்கறிஞர் அபய் சஹாய் கூறியிருக்கிறார். 

இளம் வயது தங்கை கேன்சர் நோயில் மரணம், 71 வயது தாயாருக்கு உடல்நலக்குறைவு என குடும்பத்தில் அடுத்தடுத்த சோகம் ஏற்பட்டுள்ள நிலையில், மனைவியிடமிருந்து விவாகரத்து நோட்டீஸும் வந்துள்ளதில் மிகவும் வருத்தமடைந்துள்ளார் நவாசுதின் சித்திக்.

A1TamilNews.com

From around the web