சூரியனை ஆய்வு செய்ய அதிவேக புதிய விண்கலம்… இன்று ஏவியது நாசா!

வாஷிங்டன்: சூரியனை ஆய்வு செய்ய புதிய விண்கலம் ஒன்றை இன்று ஏவியுள்ளது நாசா. பார்கர் சோலார் புரோப் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலம் டெல்டா 4 ராக்கெட் மூலம் நேற்றே செலுத்தப்பட இருந்தது. கவுன்ட் டவுன் தொடங்கிய நிலையில் ராக்கெட் புறப்பட ஒரு நிமிடம், 55 வினாடிகள் இருந்த போது, தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் விண்ணில் செலுத்துவதை ஒத்திவைத்தனர். இந்திய நேரப்படி இன்று மதியம் 1 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இது ஒரு சிறிய கார்
 

சூரியனை ஆய்வு செய்ய அதிவேக புதிய விண்கலம்… இன்று ஏவியது நாசா!
வாஷிங்டன்: சூரியனை ஆய்வு செய்ய புதிய விண்கலம் ஒன்றை இன்று ஏவியுள்ளது நாசா.

பார்கர் சோலார் புரோப் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலம் டெல்டா 4 ராக்கெட் மூலம் நேற்றே செலுத்தப்பட இருந்தது.

கவுன்ட் டவுன் தொடங்கிய நிலையில் ராக்கெட் புறப்பட ஒரு நிமிடம், 55 வினாடிகள் இருந்த போது, தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் விண்ணில் செலுத்துவதை ஒத்திவைத்தனர்.

இந்திய நேரப்படி இன்று மதியம் 1 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இது ஒரு சிறிய கார் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் எடை 612 கிலோ. நீளம் 9 அடி, 10 அங்குலம். 1,400 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பத்தைத் தாங்கும். இதற்காக கார்பனால் ஆன வெளித்தகடு பொருத்தப்பட்டுள்ளது. மணிக்கு 6.9 லட்சம் கி.மீ., வேகத்தில் செல்லும். இந்த விண்கலம் சூரியனின் மேற்பரப்பு அருகே, 59.5 லட்சம் கி.மீ. தொலைவில் நிலைநிறுத்தப்படும். இதுவரை எந்தவொரு விண்கலமும் சூரியனுக்கு இத்தனை அருகே சென்றதில்லை.

அடுத்த மூன்று மாத காலம் இந்த விண்கலம் பயணித்து சூரியனின் மேற்பரப்பு அருகில் செல்லும். டிசம்பர் மாதம் சூரியனின் தோற்றம். அதில் நடக்கும் அதிசய மாற்றங்களைப் படமெடுத்து அனுப்பும்.

சூரியன் – பூமி இடையிலான துாரம் 14.9 கோடி கி.மீ. நமது பூமியின் பரப்பை வளிமண்டலம் சூழ்ந்திருப்பதை போல, சூரியனின் பரப்பை, ‘கொரோனா’ எனும் பிளாஸ்மா மண்டலம் சூழ்ந்துள்ளது. இந்த கொரோனாவுக்குள்ளேயே சென்று, இந்த விண்கலம் ஆய்வு செய்ய உள்ளது. அமெரிக்க ஆராய்ச்சியாளர் யூஜின் பார்கரை கவுரவப்படுத்தும் விதமாக, இதற்கு ‘பார்கர் சோலார் புரோப்’ என பெயரிடப்பட்டுள்ளது.

From around the web