விக்ரம் லேண்டரை தேடும் முயற்சியை தொடரும் நாசா!

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் இந்தியா நிலவுக்கு அனுப்பிய விக்ரம் லேண்டரை தேடும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. நிலவை சுற்றி வரும் நாசாவின் லுனார் ரிகனைசன்ஸ் ஆர்பிட்டர், திங்கட்கிழமை விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பகுதியில் புதிய படங்களை எடுத்துள்ளது. அந்த நேரத்தில் அந்தப் பகுதியில் வெளிச்சம் நன்றாக இருந்தது என்பதால் படங்கள் தெளிவாக வந்துள்ளதாகவும், அவைகளில் விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் பற்றி ஆராய்ந்து வருவதாகவும் நாசா தரப்பில் கூறப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில்
 

விக்ரம் லேண்டரை தேடும் முயற்சியை தொடரும் நாசா!மெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் இந்தியா நிலவுக்கு அனுப்பிய விக்ரம் லேண்டரை தேடும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

நிலவை சுற்றி வரும் நாசாவின் லுனார் ரிகனைசன்ஸ் ஆர்பிட்டர், திங்கட்கிழமை விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பகுதியில் புதிய படங்களை எடுத்துள்ளது. அந்த நேரத்தில் அந்தப் பகுதியில் வெளிச்சம் நன்றாக இருந்தது என்பதால் படங்கள் தெளிவாக வந்துள்ளதாகவும், அவைகளில் விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் பற்றி ஆராய்ந்து வருவதாகவும் நாசா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இன்னும் ஓரிரு தினங்களில் இந்த புதிய படங்கள் ஆராயப்பட்டு விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் பற்றி தெரிய வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாசாவின் லுனார் ரிகனைசன்ஸ் ஆர்பிட்டர் மீண்டும் நவம்பர் மாதம் 10ம் தேதி  விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்தை கடக்கும். அப்போதும் கூடுதல் படங்கள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

From around the web