உலகத் தமிழர்களுக்கு நா.முத்துக்குமார் விடுத்த இரண்டு முக்கிய கோரிக்கைகள்! என்ன தெரியுமா?

கவிஞர் நா.முத்துக்குமாரின் 45 வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு பிரமுகர்களும் தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். எதிர்பாராத தருணத்தில், அனைவரையும் விட்டுப் பிரிந்த கவிஞர் நா.முத்துக்குமார் கடைசியாக, அமெரிக்காவில் ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்காக நிதி திரட்டுவதற்கான நிகழ்ச்சியில் தான் பங்கேற்றார். அப்போது பேசிய கவிஞர் நா.முத்துக்குமார் உலகத் தமிழர்களுக்கு இரண்டு முக்கியமான கோரிக்கைகளை விடுத்தார். ”தமிழ் ஒரு வீரமான மொழி, தமிழ் மருத்துவரைப் போல, குறில் ஒரு மாத்திரை நெடில் இரண்டு மாத்திரை என்று ஒவ்வொரு எழுத்துக்கும்
 

உலகத் தமிழர்களுக்கு நா.முத்துக்குமார் விடுத்த இரண்டு முக்கிய கோரிக்கைகள்! என்ன தெரியுமா?கவிஞர் நா.முத்துக்குமாரின் 45 வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு பிரமுகர்களும் தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.  

எதிர்பாராத தருணத்தில், அனைவரையும் விட்டுப் பிரிந்த கவிஞர் நா.முத்துக்குமார் கடைசியாக, அமெரிக்காவில் ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்காக நிதி திரட்டுவதற்கான நிகழ்ச்சியில் தான் பங்கேற்றார்.

அப்போது பேசிய கவிஞர் நா.முத்துக்குமார் உலகத் தமிழர்களுக்கு இரண்டு முக்கியமான கோரிக்கைகளை விடுத்தார்.

”தமிழ் ஒரு வீரமான மொழி, தமிழ் மருத்துவரைப் போல, குறில் ஒரு மாத்திரை நெடில் இரண்டு மாத்திரை என்று ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு மாத்திரையை கொடுத்துள்ளது. தன்மான மிக்க மொழி. தேவையான இடத்தில் கால் மேல் கால் போட்டுக்கொள்ளும். குழந்தைகளை நிறைய தமிழ் வாசிக்கப் பழக்குங்கள். என் தந்தை சிறுவயதிலேயே நூற்றுக்கணக்கான புத்தகங்களை என்னை வாசிக்க வைத்தார்.

அது தான் இன்று உங்களிடம் என்னை கொண்டு வந்து சேர்த்துள்ளது. இலக்கியம் மட்டுமே வாழ்க்கையை மற்றும் தன்னம்பிக்கையை கற்றுத் தரும். வீட்டிலே சமையலறை, படுக்கையறை இருப்பது போல் நூலக அறை அமைத்து புத்தகங்களை அடுக்கி வையுங்கள். பெரியவர்கள் நீங்களும் படித்து அடுத்த தலைமுறை குழந்தைகளையும் படிக்க வையுங்கள்,” என்று உலகத் தமிழர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார் முத்துக்குமார்.

மேலும், ”புலம் பெயர் தமிழ் இலக்கியம் என்ற புதிய இலக்கியம் வளர்ந்துள்ளது. உங்கள் வாழ்க்கையை, மகிழ்ச்சியான, நெகிழ்ச்சியான, சிக்கலான தருணங்களை பதிவு செய்யுங்கள். தினம் தோறும் ஒரு பக்கம் எழுதி வந்தால், ஆண்டு இறுதியில் 365 இல்லை என்றாலும் குறைந்தது மூன்று பக்கங்களாவது சிறந்த படைப்பாக அமையும். நீங்களும் ஒரு எழுத்தாளர் ஆகிவிடுவீர்கள்,” என்றும் உலகத் தமிழர்கள் புதிய இலக்கியங்கள் படைக்க வேண்டும் என்றும் நா. முத்துக்குமார் கூறியிருந்தார்.

கவிஞர் நா.முத்துக்குமாரின் இந்த இரண்டு கோரிக்கைகளையும் உலகத் தமிழர்கள், அவருடைய பிறந்தநாளில் நினைவு கூர்ந்து செயல்படுத்துவது, தமிழ் மொழிக்கு செய்யும் பெரும்பணி என்று உறுதியாகச் சொல்லலாம்.

A1TamilNews.com

 

From around the web