அமித் ஷாவை டிஸ்மிஸ் செய்யுங்கள்… குடியரசுத் தலைவருக்கு முத்தரசன் கோரிக்கை!

புதுக்கோட்டை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை குடியரசுத் தலைவர் உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, “பல்வேறு பிரச்சனைகளிலிருந்து திசை திருப்பவே மத்திய பாஜக அரசு , இந்தி மொழிப் பிரச்சனையை கையில் எடுத்துள்ளது. அமித் ஷா வின் இந்தி மொழி பற்றிய கருத்து நாசகார வேலையாகும். சமூக நீதிக்கான போராட்டத்திற்கு தேவைகள் அதிகரித்துள்ளது. காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக்
 

அமித் ஷாவை டிஸ்மிஸ் செய்யுங்கள்… குடியரசுத் தலைவருக்கு முத்தரசன் கோரிக்கை!

புதுக்கோட்டை:  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை குடியரசுத் தலைவர் உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது,

“பல்வேறு பிரச்சனைகளிலிருந்து திசை திருப்பவே மத்திய பாஜக அரசு , இந்தி மொழிப் பிரச்சனையை கையில் எடுத்துள்ளது. அமித் ஷா வின் இந்தி மொழி பற்றிய கருத்து நாசகார வேலையாகும். சமூக நீதிக்கான போராட்டத்திற்கு தேவைகள் அதிகரித்துள்ளது.

காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கைது செய்யப்படவில்லை என்று அமித் ஷா முன்னதாக நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார். தற்போது நீதிமன்றத்தில், பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பரூக் அப்துல்லா கைது செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அமித் ஷா அரசியல் சட்டத்தை மீறி விட்டார்.

குடியரசுத் தலைவர் அமித் ஷாவை உடனடியாக உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் நீதிபதிகள் உடனடியாக ஜம்மு-காஷ்மீர் சென்று அங்கு நடக்கும் உண்மை நிலைகளை ஆய்வு செய்து ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும்,” என்று இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலிலும், விக்கிரவாண்டி, நாங்குனேரி சட்டமன்ற இடைத் தேர்தல்களிலும் மதசார்பற்ற கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திப்போம் என்றும் முத்தரசன் கூறினார்.

– வணக்கம் இந்தியா

 

From around the web