போராடியவரே பூமிபூஜையில் கலந்து கொண்டார்! ராமர் கோவிலுக்கு முஸ்லீம்கள் வரவேற்பு!!

ஹாசிம் அன்சாரி பாபர் மசூதி வழக்கில் சட்டரீதியாக போராடினார். அவர் மறைவுக்கு பிறகு அவரது மகன் இக்பால் அன்சாரி அந்த சட்டப் போரை தொடர்ந்தார். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு அதை மனப்பூர்வமாக மதிப்பது நம் கடமை. முஸ்லிம்கள் ராமர்கோவிலுக்கு எதிரானவர்கள் அல்ல என தெரிவிக்கவே பூமிபூஜைக்கு சென்றேன். பள்ளிவாசல் கட்ட கோவிலை இடிக்கவில்லை என உச்சநீதிமன்ற தீர்ப்பு தெளிவாக கூறியுள்ளது. ஹிந்து சகோதரர்கள் எங்களுடன் இருக்கிறார்கள். மகிழ்ச்சியான தருணத்தில் நாங்கள் அவர்களுடன் இருப்போம்.பெரும்பாலான ஹிந்துக்கள் சகிப்புத்தன்மை
 
போராடியவரே பூமிபூஜையில் கலந்து கொண்டார்! ராமர் கோவிலுக்கு முஸ்லீம்கள் வரவேற்பு!!ஹா சிம் அன்சாரி  பாபர் மசூதி வழக்கில்  சட்டரீதியாக போராடினார். அவர் மறைவுக்கு பிறகு அவரது மகன் இக்பால் அன்சாரி அந்த சட்டப் போரை தொடர்ந்தார். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு அதை மனப்பூர்வமாக மதிப்பது நம் கடமை. முஸ்லிம்கள் ராமர்கோவிலுக்கு எதிரானவர்கள் அல்ல என தெரிவிக்கவே பூமிபூஜைக்கு சென்றேன். 
 
பள்ளிவாசல் கட்ட கோவிலை இடிக்கவில்லை என உச்சநீதிமன்ற தீர்ப்பு தெளிவாக கூறியுள்ளது. ஹிந்து சகோதரர்கள் எங்களுடன் இருக்கிறார்கள். மகிழ்ச்சியான தருணத்தில் நாங்கள் அவர்களுடன் இருப்போம்.பெரும்பாலான ஹிந்துக்கள் சகிப்புத்தன்மை மிக்கவர்கள். ராமர் அவர்களது நம்பிக்கை.  அந்த நம்பிக்கையை நாம் மதித்தால்  கோவில் எழுந்த பின்னும் வேறுபாடு தோன்றாது  என இக்பால் அன்சாரி ஒரு பேட்டியில்  கூறியுள்ளார்.
 
வாரணாசியில்  ஒரு முஸ்லீம் பெண்கள் குழு ஆரத்தி எடுத்து ராம்பஜன் பாடி செம்மண் தீபங்களில் விளக்கேற்றினர்.  14 ஆண்டுகளாக பண்டிகை நாட்களில்  ஸ்ரீ ராம் ஆர்த்தி எடுத்துவரும் முஸ்லிம்பெண்கள், லமாகி கிராமம் சுபாஷ் பவனில்  ஹனுமான் உருவங்களை அலங்கரித்து   ராமஜென்ம பூமி மண் எடுத்துவைத்து பூஜை செய்தனர். 
 
நாங்கள் மதம் மாறி இன்று முஸ்லீம்கள் ஆகி விட்டோம். எங்கள் முன்னோர்கள்    முஸ்லீம்களாக மாறவில்லை.ஸ்ரீ ராமர் எங்கள்  மூதாதையர். தான். ராமர்கோவில் நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்தும் என்று  அந்த குழுவில் உள்ள நஸ்னின் தெரிவித்தார்.  அயோத்தியிலும் வாரணாசியில்  முஸ்லிம்கள் இந்துக்களுடன் சகோதரர்களாக தான் பழகிவருகிறார்கள்.

இந்த மத நல்லிணக்கத்தை அரசியல்வாதிகள் கெடுக்காமல் இருப்பதே நாட்டுக்கு நல்லது.

– வி.எச்.கே.ஹரிஹரன் 
 

From around the web