102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது மும்பை இந்தியன்ஸ் 

கொல்கத்தா : ஐபிஎல் 2018 கொல்கத்தா அணியை 102 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது மும்பை இந்தியன்ஸ் . கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இந்த போட்டி நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்றது. டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் ஃபீல்டரிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸின் தொடக்க ஆட்டக்காரர்களாக எவின் லீவிஸும், சூர்யகுமார் யாதவும் களமிறங்கினர். இருவரும் நிதானமாகவே ஆடத்தொடங்கினர். லீவிஸ் 13 பந்துகளில்
 
கொல்கத்தா : ஐபிஎல் 2018  கொல்கத்தா அணியை 102 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி  வெற்றிபெற்றது மும்பை இந்தியன்ஸ் .
 
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இந்த போட்டி நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்றது. டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் ஃபீல்டரிங்கை தேர்வு செய்தது.
 
முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸின் தொடக்க ஆட்டக்காரர்களாக எவின் லீவிஸும், சூர்யகுமார் யாதவும் களமிறங்கினர். இருவரும் நிதானமாகவே ஆடத்தொடங்கினர். லீவிஸ் 13 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார். பிளே ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் ஒரு விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்திருந்தது. கிருணால் பாண்டியா 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 
 
 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடி இஷான் கிஷன் 21 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார்.
 
 பின்னர் 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி விளையாடத் தொடங்கியது.
 
தொடக்க ஆட்டக்காரர்களாக சுனில் ந்ரேன் கிறிஸ் லின் ஆகியோர் களமிறங்கினர். கிறிஸ் லின், நிதிஷ் ரானா ஆகியோர் மட்டுமே 21 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் சரியாக ஆடவில்லை
 
கடின வெற்றி இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, 18 புள்ளி ஒரு ஓவர்களில் 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்ற மும்பை அணி, புள்ளிகள் பட்டியலில் நான்காம் இடத்திற்கு முன்னேறியது.
 
– வணக்கம் இந்தியா 
 
 
 
 
 

From around the web