சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு 150 ரன்கள் வெற்றி இலக்கு! #CSKvsMI

ஹைதராபாத் : 12வது ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டம் இன்று ஹைதராபாத்தில் இன்று நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்க்ஸும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. சென்னை அணியின் பிரமாதமான பந்து வீச்சு மும்பை அணியை ரன்கள் எடுக்க முடியாத அளவுக்கு கட்டுப்போட்டது. அந்த அணியின் பொல்லார்ட் மட்டுமே அதிகப் பட்சமாக 41 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்களில் குயிண்டன் டி காக் 29
 

சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு 150 ரன்கள் வெற்றி இலக்கு! #CSKvsMIஹைதராபாத் : 12வது ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டம் இன்று ஹைதராபாத்தில் இன்று நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்க்ஸும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

சென்னை அணியின் பிரமாதமான பந்து வீச்சு மும்பை அணியை ரன்கள் எடுக்க முடியாத அளவுக்கு கட்டுப்போட்டது. அந்த அணியின் பொல்லார்ட் மட்டுமே அதிகப் பட்சமாக 41 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்களில் குயிண்டன் டி காக் 29 ரன்களும், கிஷன் 23 ரன்களும் அடித்தனர்.

20 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து 149 ரன்களை எடுத்தது மும்பை அணி.

சென்னை அணி தரப்பில் தீபக் சாஹர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தாகூர், தாஹிர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

– வணக்கம் இந்தியா

From around the web