தங்க முட்டை வாத்தை அறுத்துப் பார்க்கத் துடிக்கும் மல்டிப்ளெக்ஸ்கள்!

இனி சென்னைக்குள் மால்கள் கட்ட இடமில்லை. இருக்கும் பெரிய சிங்கிள் அல்லது இரட்டை அரங்குகளை வேண்டுமானால் இடித்து மால்களாக்கலாம். பல திரை அரங்குகள் (Multiplexes) இப்போது சென்னைக்கு வெளியில் நிறைய உருவாகி வருகின்றன. செங்குன்றம், மதுரவாயல், செங்கல்பட்டு, பூந்தமல்லி, ஆவடி பகுதிகளில் புதிய பல்திரை அரங்குகள் திறக்கப்பட்டு வருகின்றன. தியேட்டர் வாடையே இல்லாத அண்ணா நகரில் விரைவி்ல் 10 திரைகள் திறக்கப்பட உள்ளன. (எண்பதுகளில் கிழக்கு அண்ணாநகரில் ‘கிராண்ட்’ என்ற ஒரு தியேட்டர் மட்டும் இருந்தது. அதில்தான்
 

தங்க முட்டை வாத்தை அறுத்துப் பார்க்கத் துடிக்கும் மல்டிப்ளெக்ஸ்கள்!

னி சென்னைக்குள் மால்கள் கட்ட இடமில்லை. இருக்கும் பெரிய சிங்கிள் அல்லது இரட்டை அரங்குகளை வேண்டுமானால் இடித்து மால்களாக்கலாம். பல திரை அரங்குகள் (Multiplexes) இப்போது சென்னைக்கு வெளியில் நிறைய உருவாகி வருகின்றன. செங்குன்றம், மதுரவாயல், செங்கல்பட்டு, பூந்தமல்லி, ஆவடி பகுதிகளில் புதிய பல்திரை அரங்குகள் திறக்கப்பட்டு வருகின்றன. தியேட்டர் வாடையே இல்லாத அண்ணா நகரில் விரைவி்ல் 10 திரைகள் திறக்கப்பட உள்ளன. (எண்பதுகளில் கிழக்கு
அண்ணாநகரில் ‘கிராண்ட்’ என்ற ஒரு தியேட்டர் மட்டும் இருந்தது. அதில்தான் மௌனராகம் பார்த்தேன்)

கிழக்கு கடற்கரைச் சாலையில் மாயாஜால் மட்டும் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறது. அதற்கு கடும் போட்டியாக வருகிறது பிவிஆர். அதுவும் சுங்கச் சாவடிக்கு சில மீட்டர்கள் முன்பாகவே அமைத்திருக்கிறார்கள். சென்னையைச் சுற்றி இன்னும் 80-க்கும் அதிகமான திரைகள் திறக்கப்படவிருப்பதாக தகவல்.

லாபமில்லாமலா இத்தனை அரங்குகளைத் திறப்பார்கள்?

தியேட்டர் பிஸினெஸ் இப்போது ரொம்பவே செழிப்பாக உள்ளது. படம் தயாரிப்பவர்களின் நிலைதான் பரிதாபம். அதை மூலதனமாக வைத்து தியேட்டர் நடத்துவர்கள் நன்றாகவே உள்ளனர். காரணம், தியேட்டரில் நடக்கும் கேன்டீன் பிஸினெஸ்.

சத்யம் குழுமம், கமலா போன்ற சில அரங்குகளைத் தவிர, மற்ற மால்களில் தின்பண்டங்களின் விலை கொள்ளையோ கொள்ளை. ஒரு சாதாரண அளவு பாப்கார்ன் + கோலா ‘காம்போ’வின் விலை ரூ 400 – 500 என்று போகிறது (இதில் பெரிய அளவு காம்போ ஒன்று உள்ளது. விலை ரூ 715!). நான்குபேர் கொண்ட குடும்பத்துக்கு இரண்டு ‘காம்போ’ வாங்கினால் ரூ 1000. டிக்கெட் விலை, பார்க்கிங்குடன் சேர்த்தால் ரூ 2000!

‘டிக்கெட் கட்டணம், பார்க்கிங் கட்டணம், தின்பண்டங்களின் விலையைக் குறைப்போம்… இல்லாவிட்டால் தியேட்டர்களை மூட வைப்போம்’ என்றெல்லாம் பெரும்குரலில் சபதம் செய்தனர் சினிமா சங்கத்தினர். ஆனால் நடந்தது என்ன… இவர்கள் சபதம் போட்டு, தியேட்டர் ஸ்ட்ரைக் செய்த பிறகுதான் இரண்டு மடங்காகக் கட்டணங்கள் உயர்ந்தன. இரு சக்கர வாகனங்களுக்கு மொத்தமாக ரூ 20 வாங்கி வந்த கமலா சினிமாஸ், இந்த ஸ்ட்ரைக்குக்குப் பிறகுதான் ஒரு மணி நேரத்துக்கு ரூ 10 என மாற்றினார்கள்.

நகரின் மையத்தில் இருக்கும் சத்யத்தில் இப்போதும் காருக்கு ரூ 40தான் பார்க்கிங் கட்டணம். ஆனால் நகருக்கு வெளியே பரந்து விரிந்து கிடக்கும் மல்டிப்ளெக்ஸ்களில் ரூ 100 முதல் 160 வரை!

டிக்கெட் கட்டணம், பார்க்கிங் கட்டணம், தின்பண்ட விற்பனை, கூடவே மசாஜ் சென்டர்கள்… விலைகளை நிச்சயம் குறைக்க மாட்டார்கள். இன்னும் இன்னும் ஏற்றிக் கொண்டுதான் போவார்கள். அதற்கு எதிராக எழும் குரல்களுக்கும் மதிப்பிருக்காது.
தியேட்டர் தொழில் செழிப்பாகிவிட்டது.

சாப்பிடுங்கடா… நல்லா சாப்பிடுங்க. ஆனா தங்கமுட்டை போட்ட வாத்தை அறுத்த கதையை மறந்துடாதீங்க!

– வினோஜாசன்

From around the web