மாமல்லபுரத்தில் அலைமோதும் சுற்றுலாப் பயணிகள்!

மாமல்லபுரம்: பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகைக்குப் பிறகு மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பிரதமர் மோடியுடன் சீன அதிபர் ஜி ஜின்பிங் நடத்திய பேச்சுவார்த்தையினால் மாமல்லபுரம் உலகச் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. தலைவர்களின் வருகையினால் அக்டோபர் 8ம் தேதி முதல் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. 5 நாட்களுக்குப் பிறகு வழக்கம் போல் சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். இந்திய – சீன உச்சிமாநாட்டினால், மாமல்லபுரம் புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. தலைவர்கள் வந்து
 

மாமல்லபுரத்தில் அலைமோதும் சுற்றுலாப் பயணிகள்!மாமல்லபுரம்:  பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகைக்குப் பிறகு மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

பிரதமர் மோடியுடன் சீன அதிபர் ஜி ஜின்பிங் நடத்திய பேச்சுவார்த்தையினால் மாமல்லபுரம் உலகச் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. தலைவர்களின் வருகையினால் அக்டோபர் 8ம் தேதி முதல் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. 5 நாட்களுக்குப் பிறகு வழக்கம் போல் சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர்.

இந்திய – சீன உச்சிமாநாட்டினால், மாமல்லபுரம் புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. தலைவர்கள் வந்து சென்ற இடங்களில் கூட்டம் அலைமோதுகிறது. . ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு, கலங்கரை விளக்கம், உருண்டைப் பாறை, கடற்கரைக் கோவில் ஆகிய இடங்களில் உள்ள சிற்ப வேலைப்பாடுகளை ஆர்வத்துடன் கண்டு ரசித்து புகைப்படங்கள் எடுத்துக் கொள்கிறார்கள்.

மாமல்லபுரம் பேரூராட்சியின் குநீடிர், சாலைவசதி, கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் மேம்படுத்தப் பட்டுள்ளது.  சிற்பங்கள், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் புனரமைக்கப் பட்டுள்ளது.   சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. உலக சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. வரும் நாட்களில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

 

From around the web