பொன்மகள் வந்தாள்’ படத்தைத் தொடர்ந்து வேகம் எடுக்கும் ஓடிடி ப்ளாட்பாஃர்ம்!!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மூன்றாவது கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. ரிலீசுக்கு தயாராக இருக்கும் படங்களை விநியோகம் செய்ய முடியாமல் தயாரிப்பாளர்கள் தவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையைத் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சமூக வலை தளங்களான அமேசான், நெட்ஃபிளிக்ஸ்,ஹாட்ஸ்டார் நிறுவனங்கள் படங்களை ஆன்லைனில் வெளியிடுவதற்காக தயாரிப்பு நிறுவனங்களை அணுகி உள்ளன. ஊரடங்கு முடிவுக்கு வந்த பின்னாலும் உடனடியாக தியேட்டர்களில் ரசிகர்கள் குவிவார்களா என்பது சந்தேகமே. இதனால், பல புதிய படங்களை
 

பொன்மகள் வந்தாள்’ படத்தைத் தொடர்ந்து வேகம் எடுக்கும் ஓடிடி ப்ளாட்பாஃர்ம்!!கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மூன்றாவது கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. ரிலீசுக்கு தயாராக இருக்கும் படங்களை விநியோகம் செய்ய முடியாமல் தயாரிப்பாளர்கள் தவித்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையைத் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சமூக வலை தளங்களான அமேசான், நெட்ஃபிளிக்ஸ்,ஹாட்ஸ்டார் நிறுவனங்கள் படங்களை ஆன்லைனில் வெளியிடுவதற்காக  தயாரிப்பு நிறுவனங்களை  அணுகி உள்ளன.

ஊரடங்கு முடிவுக்கு வந்த பின்னாலும் உடனடியாக தியேட்டர்களில் ரசிகர்கள் குவிவார்களா என்பது சந்தேகமே. இதனால், பல புதிய படங்களை நேரடியாக ஆன்லைனில் ரிலீஸ் செய்ய ஒவ்வொரு நிறுவனமும் போட்டி போட்டு வருகின்றன.

பாலிவுட்டில் சுஜித் சர்கார் இயக்கத்தில் அமிதாப் பச்சன், ஆயுஷ்மான் குரானா நடிப்பில் உருவாகி உள்ள ‘குலாபோ சிட்டாபோ’ படத்தை அமேசான் பிரைம் நிறுவனம் ஆன்லைனில் வெளியிட அனுமதி பெற்றிருக்கிறது.

அதே போல ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்‌ஷய் குமார், கியாரா அத்வானி நடித்துள்ள ‘லக்‌ஷ்மி பாம்’ திரைப்படமும்  ஹாட்ஸ்டாரில்  ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு இருக்கிறது.
இதைத் தவிர  வித்யா பாலனின் ஷகுந்தலா தேவி – ஹியூமன் கம்ப்யூட்டர், புமி பெட்னேகரின் துர்காவதி, கரண் ஜோஹரின் கஞ்சன் சக்ஸேனா மற்றும் அமிதாப் பச்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜுந்த் மற்று செர்ரே  போன்ற படங்களும்  ஆன்லைனில் ரிலீசாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

சிறு பட்ஜெட் திரைப்படங்களைத் தயாரித்த நிறுவனங்களுக்கு போதுமான வசூல் ஆன்லைன் மூலம் கிடைத்து விடும். ஆனால் பெரிய பட்ஜெட் படங்கள் தியேட்டர்கள் திறக்கும் நாளை எதிர்பார்த்து காத்து நிற்கின்றன.

சந்தானம் நடிப்பில் ‘சர்வர் சுந்தரம்’ என்று பொன்மகள் வந்தாள் படத்தைத் தொடர்ந்து கோடம்பாக்கத்திலும் முடங்கியிருக்கும் பல படங்களைத் தூசு தட்டி தயாரிப்பாளர்கள், ஆன்லைனில் வெளியிட பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

A1TamilNews.com

From around the web