மோடியின் பாராட்டைப்பெற்ற சலூன் கடைக்காரர் மகள் நேத்ரா ஐ.நா.வின் நல்லெண்ணத் தூதராக அறிவிப்பு!

மாதந்தோறும் பிரதமர் மோடி வானொலி மூலம் மன் கி பாத் நிகழ்ச்சியில் மக்களிடையே உரையாற்றி வருகிறார். அந்த வகையில் மே31ம் தேதியில் இந்தியா கொரோனாவிற்கு எதிராகப் போராடி வருவதைக் குறித்து பேசினார். மேலும் ஊடங்கு காலத்தில் ஏழைகளுக்கு உதவி செய்தவர்களைப் பற்றியும் பேசியிருந்தார். பல்வேறு நிலையில் இருக்கும் மக்களும் தங்களால் இயன்ற அளவு உதவி புரிந்து வருகின்றனர். மதுரையில் சலூன் கடை வைத்திருக்கும் மோகன் மகளின் படிப்புச் செலவிற்காக சேர்த்து வைத்திருந்த 5 லட்ச ரூபாய் பணத்தை
 

மோடியின் பாராட்டைப்பெற்ற சலூன் கடைக்காரர் மகள் நேத்ரா  ஐ.நா.வின் நல்லெண்ணத் தூதராக  அறிவிப்பு!மாதந்தோறும் பிரதமர் மோடி வானொலி மூலம் மன் கி பாத் நிகழ்ச்சியில் மக்களிடையே உரையாற்றி வருகிறார். அந்த வகையில் மே31ம் தேதியில் இந்தியா கொரோனாவிற்கு எதிராகப் போராடி வருவதைக் குறித்து பேசினார்.

மேலும் ஊடங்கு காலத்தில் ஏழைகளுக்கு உதவி செய்தவர்களைப் பற்றியும் பேசியிருந்தார். பல்வேறு நிலையில் இருக்கும் மக்களும் தங்களால் இயன்ற அளவு உதவி புரிந்து வருகின்றனர்.

மதுரையில் சலூன் கடை வைத்திருக்கும் மோகன் மகளின் படிப்புச் செலவிற்காக சேர்த்து வைத்திருந்த 5 லட்ச ரூபாய் பணத்தை ஏழைகளுக்கு செலவிட்டதற்கு மோடி பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.

மோடியின் பாராட்டிற்குப் பிறகு உலகம் முழுவதும் இருந்து மோகனுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன. இந்நிலையில் மோகனின் மகளான நேத்ரா ஐ.நா-வின் வளர்ச்சி மற்றும் அமைதி சார்பாக ஏழை மக்களின் நல்லெண்ணத் தூதராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

நேத்ராவின் எதிர்காலத்திற்காக சுமார் ஒரு லட்ச ரூபாயை ஊக்கத் தொகையும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ஜெனிவாவில் நடைபெற இருக்கும் ஐ.நா மாநாட்டில் வறுமை ஒழிப்பு தொடர்பாக பேச வாய்ப்பையும் ஐநா அளித்துள்ளது.

A1TamilNews.com

From around the web