இரவில் மதுரைக்கு வந்த பிரதமர் மோடி… எடப்பாடியுடன் ஆலோசனையா?

மதுரை: இன்று தேனி மற்றும் ராமநாதபுரம் அதிமுக – பாஜக கூட்டணி பொதுக்கூட்டங்களில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி நேற்றிரவு தனி விமானம் மூலம் மதுரைக்கு வந்தார். புறநகர் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியவர், இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் தேனிக்கும், அங்கிருந்து ராமநாதபுரத்திற்கும் பிரச்சாரத்திற்காக செல்கிறார். தேனியில் போட்டியிடும் துணை முதல்வர் ஓபிஎஸ்ஸின் மகன் ரவீந்திரநாத் மற்றும் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டசபை இடைத்தேர்தல் வேட்பாளர்கள் லோகிராஜன், மயில்வேல் ஆகியோரை ஆதரித்து நடைபெறும் கூட்டத்தில் பிரதமர் மோடி
 
மதுரை: இன்று தேனி மற்றும் ராமநாதபுரம் அதிமுக – பாஜக கூட்டணி பொதுக்கூட்டங்களில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி நேற்றிரவு தனி விமானம் மூலம் மதுரைக்கு வந்தார். புறநகர் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியவர், இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் தேனிக்கும், அங்கிருந்து ராமநாதபுரத்திற்கும் பிரச்சாரத்திற்காக செல்கிறார்.
 
தேனியில் போட்டியிடும் துணை முதல்வர் ஓபிஎஸ்ஸின் மகன் ரவீந்திரநாத் மற்றும் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டசபை இடைத்தேர்தல் வேட்பாளர்கள் லோகிராஜன், மயில்வேல் ஆகியோரை ஆதரித்து நடைபெறும் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். ராமநாதபுரத்தில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து பிர்ச்சாரம் செய்கிறார். பின்னர் மதுரை விமான நிலையம் வந்து அங்கிருந்து மங்களூருக்கு தனி விமானம் மூலம் செல்கிறார். 
 
பிரதமர் வருகையை ஒட்டி மதுரை, தேனி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணி அளவில் மதுரை விமான நிலையத்திலிருந்து தேனி செல்வதற்காக முந்தைய நாள் இரவே மதுரைக்கு பிரதமர் ஏன் வந்தார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தேர்தல் குறித்த ஆலோசனை இடம் பெற்றிருக்குமா என்று கேள்வியும் எழுகிறது. 
 
2014ம் ஆண்டு தேர்தலின் போது, பிரச்சாரம் முடிந்தவுடன் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டது. அதன் மூலம் எதிர்க்கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடை செய்ததுடன், அதிமுகவினர் தங்கு தடையின்றி பணம் கொடுக்கவும் போலீசார் அனுமதித்தனர். இப்போதும் அப்படி ஒரு 144 தடை உத்தரவு பிறப்பிக்கலாமா என்று மத்திய அரசிடம் ஆலோசனை கேட்கப்பட்டதாக தகவல்கள் உலவுகிறது. மதுரைக்கு பிரதமரின் இரவு வருகை, இந்தத் தகவல்களுக்கு வலு சேர்ப்பதாக உள்ளது.
 
– வணக்கம் இந்தியா

From around the web