கமல் ஹாசன் நாக்கை அறுக்கச் சொன்ன அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார்!

தூத்துக்குடி: அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கோட்சே பற்றி கமல் ஹாசன் கூறிய சர்ச்சைக்குரிய கருத்தால் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கமல் ஹாசன் நாக்கை அறுக்க வேண்டும் என்று ஆவேசமாகப் பேசியிருந்தார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ராம்பாவிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சார்ந்த வழக்கறிஞர்கள் ரெங்கநாதன், மங்கள் ராஜ், பிரகாஷ், ஆல்வின் ரஸ்ஸல், விக்டோரியா,
 


தூத்துக்குடி: அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கோட்சே பற்றி கமல் ஹாசன் கூறிய சர்ச்சைக்குரிய கருத்தால் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கமல் ஹாசன் நாக்கை அறுக்க வேண்டும் என்று ஆவேசமாகப் பேசியிருந்தார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ராம்பாவிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சார்ந்த வழக்கறிஞர்கள் ரெங்கநாதன், மங்கள் ராஜ், பிரகாஷ், ஆல்வின் ரஸ்ஸல், விக்டோரியா, பட்டுராஜ், ஆண்ட்ரூஸ், க்ளாட்சன், பாண்டி, குணசேகரன், மணிகண்ட ராஜா, அஜீத், கைதான் ஐயா மொரெஸ் ஆகியோர் இந்த புகார் மனுவை அளித்துள்ளார்கள்.

“எங்கள் கட்சித் தலைவர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதை அரசியல் ஆதாயத்திற்காக திரித்துப் பேசியதுடன், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என்று பாலவளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மிரட்டல் விடுத்தார்.

அவருடைய பேச்சால் தூண்டப்பட்டு அவருடைய கட்சியினரும் பிற அமைப்புகளைச் சார்ந்தவர்களும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். கமல் ஹாசன் கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் கல் வீசியும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டனர். 

தேசிய ஒருமைப்பாட்டிற்கும் இந்திய இறையாண்மைக்கும் குந்தகம் விளைவிக்கும் விதமாகப் பேசி கமல் ஹாசனுக்கு மிரட்டல் விடுத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசனுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்,” eன்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கமல் ஹாசன் மீது பல்வேறு ஊர்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வரும் வேளையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

– வணக்கம் இந்தியா

 

From around the web