‘நீட் மசோதா விவகாரத்தை மறைத்த சட்ட அமைச்சர் பதவி விலகனும்’- மு.க.ஸ்டாலின்!

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட இரு மசோதாக்கள் நிராகரிக்கப் பட்டது என்று உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். முன்னதாக நீட் மசோதாவுக்கு என்ன ஆயிற்று என்று மாநிலங்களவையில் திருச்சி சிவா கேள்வி எழுப்பியபோது பதில் அளிக்காமல் மவுனம் காத்தனர். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே நீதிமன்றத்தில் மசோதாக்கள் நிராகரிக்கபட்டதாக கூறப்பட்டது. எப்போது மசோதா அனுப்பப்பட்டது, நிராகரிக்கப் பட்டது போன்ற விவரங்களை நீதிமன்றம் கேட்டது. இதைத் தொடர்ந்து மாநிலங்களவை, மக்களவையில் திமுக கேள்வி
 
‘நீட் மசோதா விவகாரத்தை மறைத்த சட்ட அமைச்சர் பதவி விலகனும்’- மு.க.ஸ்டாலின்!
சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட இரு மசோதாக்கள் நிராகரிக்கப் பட்டது என்று உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

முன்னதாக நீட் மசோதாவுக்கு என்ன ஆயிற்று என்று மாநிலங்களவையில் திருச்சி சிவா கேள்வி எழுப்பியபோது பதில் அளிக்காமல் மவுனம் காத்தனர். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே நீதிமன்றத்தில் மசோதாக்கள் நிராகரிக்கபட்டதாக கூறப்பட்டது.
எப்போது மசோதா அனுப்பப்பட்டது, நிராகரிக்கப் பட்டது போன்ற விவரங்களை நீதிமன்றம் கேட்டது.

இதைத் தொடர்ந்து மாநிலங்களவை, மக்களவையில்  திமுக கேள்வி எழுப்பியது. அப்போதும் மவுனம் காத்தது மத்திய அரசு. திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தார்கள். தற்போது  2017 ம் ஆண்டு செப்டம்பர் மாதமே மசோதா திருப்பி அனுப்பப் பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் கடிதம் மூலம் தெரிய வந்துள்ளது. இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாவது,

“நீட் விலக்கு கோரி தமிழக சட்டமன்றம் இயற்றிய மசோதாக்களை குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பியிருப்பதாக 2017 செப்டெம்பர் மாதக் கடிதத்திலேயே தெரிவித்திருக்கிறது மத்திய அரசு. அதை நம்மிடமிருந்து மறைத்திருக்கிறது தமிழக அரசு. திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களை ஆறு மாதத்திற்குள் மீண்டும் நிறைவேற்றி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் அதிகாரம் Article 201-ன் படி, சட்டமன்றத்திற்கு உள்ளது.

21 மாதங்களுக்கு மேல் ஆகி விட்டதால் இனி அதற்கு வாய்ப்பில்லை. இது, அதிமுக அரசு நம் தமிழக மாணவர்களுக்குச் செய்துள்ள பச்சைத் துரோகம் இல்லையா? இந்த துரோகத்துக்கு யார் பொறுப்பு? சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் எந்த அடிப்படையில் இன்னமும் பதவியில் தொடர்கிறார்? ராஜினாமா செய்யட்டும்,” என்று மு.க.ஸ்டாலின் அறிக்கையில் கூறியுள்ளார்.

தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் வசிக்கும் தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கிய நீட் விவகாரத்தில் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்தே மசோதா விவகாரத்தை வெளியே தெரிய விடாமல் மறைத்தார்களோ என்ற கேள்வி எழுகிறது.

– வணக்கம் இந்தியா

 
 
 
 

From around the web