ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் – ராமதாஸுக்கு மு.க.ஸ்டாலின் மீண்டும் சவால்!

முரசொலி அறக்கட்டளை கட்டப்பட்டுள்ள இடம் பஞ்சமி நிலம் என்று பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸின் குற்றச்சாட்டை அடுத்து, பாஜகவின் மாநிலச் செயலாளர் டாக்டர்.சீனிவாசன் தேசிய ஆதிதிராவிடர்கள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, “டாக்டர் ராமதாஸின் கூற்றை நம்பி மண் குதிரையில் ஏறி ஆற்றில் இறங்கியுள்ளார் டாக்டர்.சீனிவாசன். அவருக்காக அனுதாப்படுகிறேன். துளி கூட உண்மை இல்லாத ஜமுக்காளத்தில் வடிகட்டிய ஒரு பொய் குறித்து தேசிய ஆதிதிராவிடர்கள் ஆணையத்திற்குச்
 

ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் – ராமதாஸுக்கு மு.க.ஸ்டாலின் மீண்டும் சவால்!முரசொலி அறக்கட்டளை கட்டப்பட்டுள்ள இடம் பஞ்சமி நிலம் என்று பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸின் குற்றச்சாட்டை அடுத்து, பாஜகவின் மாநிலச் செயலாளர் டாக்டர்.சீனிவாசன் தேசிய ஆதிதிராவிடர்கள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது,

“டாக்டர் ராமதாஸின் கூற்றை நம்பி மண் குதிரையில் ஏறி ஆற்றில் இறங்கியுள்ளார் டாக்டர்.சீனிவாசன். அவருக்காக அனுதாப்படுகிறேன். துளி கூட உண்மை இல்லாத ஜமுக்காளத்தில் வடிகட்டிய ஒரு பொய் குறித்து தேசிய ஆதிதிராவிடர்கள் ஆணையத்திற்குச் சென்று நேரத்தை வீணடிப்பதை விட, சிறுதாவூர் பங்களா கட்ட கையகப்படுத்தப்பட்ட பஞ்சமி நிலத்தை பஞ்சமி நிலத்தைக் கைப்பற்ற டாக்டர்.ராமதாஸுடன் சேர்ந்து முயற்சி எடுத்தால் ஏதாவது பலன் கிடைக்கும்.

டாக்டர்.ராமதாஸ்க்கு நான் ஏற்கனவே விடுத்துள்ள அறைகூவலை இப்போதும் வலியுறுத்துகிறேன். முரசொலி அலுவலகம் இருக்குமிடம் பஞ்சமி நிலம் என்று நிருபிக்க டாக்டர்.ராமதாஸ் முன்வருவாரா?. அவருடைய கைப்பாவையாக சீனிவாசன், டாக்டர்.ராமதாஸை வலியுறுத்த முன்வருவாரா?,” என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்திற்காகச் சென்ற மு.க.ஸ்டாலின் அசுரன் திரைப்படத்தைப் பார்த்து  பஞ்சமி நிலம் மீட்பு குறித்த அசுரன் படம் அல்ல பாடம் என்று குறிப்பிட்டு இருந்தார். உடனடியாக முரசொலி அலுவலம் இருக்கும் இடமும் பஞ்சமி நிலம் தானே என்று சர்ச்சையை கிளப்பினார்  டாக்டர்.ராமதாஸ். தற்போது தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்திற்குச் சென்றுள்ளது.

– வணக்கம் இந்தியா

From around the web