அமெரிக்காவில் சமூகநீதிக்கான போராட்டக் களத்தில் அதிர்ந்த பறையிசை முழக்கம்!!

அமெரிக்காவில் மினியாபோலிஸ் நகரில் ஜார்ஜ் ஃப்ளாயிட் என்ற கருப்பினத்தவர் போலீசார் காவலில் கழுத்து மீது முழங்காலால் நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது. போராட்டங்கள் தொடர்ந்தன. வெள்ளை மாளிகை முற்றுகையிடப்பட்டு அதிபர் ட்ரம்ப் , வெள்ளை மாளிகையின் பாதாள அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். Black Lives Matter என்ற முழக்கம் நாடெங்கிலும் எதிரொலிக்கத் தொடங்கியது. வெள்ளை இன அமெரிக்கர்கள் உட்பட அனைத்து சமுதாய மக்களும் ஆதரவு தெரிவித்து வந்தனர். அமெரிக்கத் தமிழர்களும்
 

அமெரிக்காவில் சமூகநீதிக்கான போராட்டக் களத்தில் அதிர்ந்த பறையிசை முழக்கம்!!மெரிக்காவில் மினியாபோலிஸ் நகரில் ஜார்ஜ் ஃப்ளாயிட் என்ற கருப்பினத்தவர் போலீசார் காவலில் கழுத்து மீது முழங்காலால் நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

போராட்டங்கள் தொடர்ந்தன. வெள்ளை மாளிகை முற்றுகையிடப்பட்டு அதிபர் ட்ரம்ப் , வெள்ளை மாளிகையின் பாதாள அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். Black Lives Matter என்ற முழக்கம் நாடெங்கிலும் எதிரொலிக்கத் தொடங்கியது.

வெள்ளை இன அமெரிக்கர்கள் உட்பட அனைத்து சமுதாய மக்களும் ஆதரவு தெரிவித்து வந்தனர். அமெரிக்கத் தமிழர்களும் தங்கள் ஆதரவையும் ஜார்ஜ் ஃப்ளாய்ட் படுகொலைக்கு நீதி கேட்டும் குரல் எழுப்பினார்கள்.

மினசோட்டா தமிழ்ச் சங்கத்தின் சார்பில் மினியாபோலிஸ் நகரத்தின் சிகாகோ அவென்யூவில் உள்ள திடலில் பறை முழக்கத்துடன் ஜார்ஜ் ஃப்ளாய்ட் படுகொலைக்கு நீதி கேட்டும், போராட்டத்திற்கு ஆதரவும் தெரிவித்தனர்.

மினசோட்டா தமிழ்ச்சங்கத்தின் சார்பில் கலந்து கொண்ட இந்த பறையிசைக் குழுவினர் ”தமிழர்கள் தென்னிந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா வில் வசித்து வருகிறார்கள். மொழி சிறுபான்மையினராகவும், அமெரிக்காவில் குடியேறியவர்களாகவும், இன பாகுபாடு மற்றும் இன அடிப்படையிலான வன்முறையின் வலியை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. சமூகநீதியை நிலைநாட்ட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் நாங்கள் உணர்ந்துள்ளோம்.

சமூகநீதியை நிலைநாட்டுவதற்காக நாங்கள் ஆதரவுக் கரங்களை நீட்டுகிறோம். திரு.ஜார்ஜ் ஃப்ளாயிடின் நினைவுகளில் துணை நிற்கிறோம். இந்த நேரத்தில் சமூகநீதி அவசியமானது. Black Lives certainly Matter. Say his Name Geroge Floyd,” என்று தங்கள் ஆதரவை  பறை முழக்கத்துடன் ஆழமாக பதிவு செய்துள்ளனர்.

கூடியிருந்த அமெரிக்கர்கள் வீடியோவில் படமெடுத்ததுடன், பறை முழக்கத்தைக் கேட்டு தங்களை அறியாமலே ஆடவும் தொடங்கி விட்டனர். 

சமநீதியுடன் செறிந்த வாழ்க்கை முறையுடன் வாழ்ந்து வரலாறு படைத்த பண்டைய தமிழர்களின் பறை முழக்கம்,  உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் சமூகநீதியை நிலை நாட்டவும் ஒலித்துள்ளது என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

A1TamilNews.com

From around the web