சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணம்! அமெரிக்கத் தமிழர்கள் கண்டனம்!!

சாத்தான்குளத்தில் வியாபாரிகள் ஜெயராஜ்-பென்னிக்ஸ் போலீஸ் விசாரணையில் அடிக்கப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு, இந்தியாவுக்கு வெளியேயும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் மினசோட்டா தமிழ் சங்கத்தின் சார்பிலும், நிர்வாகக் குழுவினர் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். மினசோட்டா தமிழ்ச் சஙகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளத்தில் கடந்த வாரம் ஜெயராஜ் (59) மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகிய இருவரையும் தமிழக
 

சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணம்! அமெரிக்கத் தமிழர்கள் கண்டனம்!!சாத்தான்குளத்தில் வியாபாரிகள் ஜெயராஜ்-பென்னிக்ஸ் போலீஸ் விசாரணையில் அடிக்கப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு, இந்தியாவுக்கு வெளியேயும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் மினசோட்டா தமிழ் சங்கத்தின் சார்பிலும், நிர்வாகக் குழுவினர் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். மினசோட்டா தமிழ்ச் சஙகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

“தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளத்தில் கடந்த வாரம் ஜெயராஜ் (59) மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகிய இருவரையும் தமிழக காவலர்கள்
சிறையில் அடித்தே கொலை செய்திருப்பது மனிதத்தன்மை அற்ற செயலாகும். அச்செயலை வடஅமெரிக்காவில் உள்ள மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

மினசோட்டாவில் ஜார்ஜ் பிளாய்ட் காவலர் ஒருவரால் கொல்லப்பட்ட (மே 25) செய்தி உலகமெங்கும் பரவி, அனைத்து நாடுகளிலும் தொடர் போராட்டமாக நடந்து கொண்டிருக்கிறது. மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் சார்பாக பறையிசைத்து அவர் இறந்த இடத்தில் நமது கண்டனத்தையும், நினைவேந்தலையும் தெரிவித்தோம். அந்த காய வடு மறைவதற்கு முன்பே அதைவிட கொடிய வகையில் தமிழ்நாட்டில் நடந்த இப்படியொரு கொடுஞ் செயல் மிகுந்த வேதனையளிக்கிறது.

தமிழ்நாடு அரசு, அந்தக்குற்றச் செயலில் ஈடுபட்ட அனைத்துக் காவலர்களையும் விசாரித்து அவர்களுக்குத் தகுந்த தண்டனையை வழங்குமாறும், இனியும் இது போல் வரும் காலங்களில் குற்றச் செயல்கள் தொடராமல் இருக்கத் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்,” என்று மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மினசோட்டாவின் தலைநகரான மினியாபோலிஸ் நகரில் தான் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாயிட்டை கழுத்தை நெறித்து கொன்றார் போலீஸ்காரர் ஒருவர். அந்த சம்பவத்தால் அமெரிக்கா முழுவதும் போராட்டம் வெடித்தது. மினியாபோலீஸ் நகர காவல்துறையே கூண்டோடு கலைக்கப்பட்டு புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

மினசோட்டா தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பறையிசைத்து ஜார்ஜ் பிளாய்ட் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டத்தில் பங்கேற்றனர்.

A1TamilNews.com

தொடர்புடைய செய்தி : அமெரிக்காவில் சமூகநீதிக்கான போராட்டக் களத்தில் அதிர்ந்த பறையிசை முழக்கம்!!

From around the web