ஸ்டாலின் மீதான வழக்கை வாபஸ் பெற்றார் அமைச்சர் வேலுமணி!

சென்னை: தன்னைப் பற்றி மு.க.ஸ்டாலின் பேசக் கூடாது என்று தொடர்ந்த வழக்கை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாபஸ் பெற்றுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் உள்ளாட்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும், ஒப்பந்தங்கள் மூலம் தனியார் நிறுவனங்கள் பலன் அடைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டி பேசி வந்தார். தேர்தல் பிரச்சாரத்தில் தன்னைப் பற்றி பேசக்கூடாது என்று தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் வேலுமணி. இடைக்கால தடை எதையும் விதிக்காத நிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, உள்ளாட்சி தேர்தல்
 

சென்னை: தன்னைப் பற்றி மு.க.ஸ்டாலின் பேசக் கூடாது என்று தொடர்ந்த வழக்கை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாபஸ் பெற்றுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் உள்ளாட்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும், ஒப்பந்தங்கள் மூலம் தனியார் நிறுவனங்கள் பலன் அடைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டி பேசி வந்தார்.

தேர்தல் பிரச்சாரத்தில் தன்னைப் பற்றி பேசக்கூடாது என்று தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் வேலுமணி. இடைக்கால தடை எதையும் விதிக்காத நிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, உள்ளாட்சி தேர்தல் விரைவில் வர உள்ளதால் மு.க.ஸ்டாலின் தன்னைப் பற்றி பேசுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வேலுமணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கூறினார்கள்.

இது போன்ற வழக்குகளை ஏற்கனவே தள்ளுபடி செய்துள்ளேன், மனுதாரர் சம்மந்தப்பட்ட வழக்கு கூட தள்ளுபடி ஆகியுள்ளது என்று நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் சுட்டிக் காட்டியுள்ளார்.

மறுநாள் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த போது வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அமைச்சர் வேலுமணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எழுத்துப் பூர்வமாக தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் வழக்கு வாபஸ் விவகாரத்தால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

– வணக்கம் இந்தியா

From around the web