உச்சநீதிமன்றம் சொல்லித் தான் மின்வாரியத்தில் வெளி மாநிலத்தவர்கள் சேர்க்கை – அமைச்சர் தங்கமணி!

நாமக்கல்: தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வை அமைச்சர் பி.தங்கமணி உச்சநீதிமன்ற உத்தரவின் படி தான் வெளிமாநிலத்தவர்கள் மின்வாரியத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். நாமக்கல்லில் காவல்துறை தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமைச்சர் பி.தங்கமணி செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது. காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ள செயலிகளை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைப்புடன் காவல்துறை சிறப்பாக செயல்பட முடியும். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 5 ஆயிரம்
 

நாமக்கல்: தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வை அமைச்சர் பி.தங்கமணி உச்சநீதிமன்ற உத்தரவின் படி தான் வெளிமாநிலத்தவர்கள் மின்வாரியத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

நாமக்கல்லில் காவல்துறை தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமைச்சர் பி.தங்கமணி செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

“முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது. காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ள செயலிகளை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைப்புடன் காவல்துறை சிறப்பாக செயல்பட முடியும்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 5 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் கேங் மேன்களாக நியமிக்கப்பட உள்ளனர். தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயராது. இங்கு மின்கட்டணம் பற்றி பேசுபவர்கள் பக்கத்தில் புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்வது பற்றி எதுவும் பேசுவதில்லை.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தான் வெளிமாநிலத்தவர்கள் மின் வாரியத்தில் பணி அமர்த்தப்பட்டுள்ளார்கள். இரண்டு ஆண்டுகளுக்குள் அவர்கள் தமிழ் கற்றுக்கொள்ளாவிட்டால் தகுதி இழப்பார்கள்.

தமிழ்நாட்டில் கோடைகாலத்தில் 16 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. கூடுதலாக 500 மெகாவாட் மின்சாரம் தேவைப்பட்டாலும், தயாராகவே உள்ளோம். தென் மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால், மின்வாரியத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.

உச்சநீதிமன்றத்தின் எந்த குறிப்பிட்ட உத்தரவின் அடிப்படையில் வெளிமாநிலத்தவர்கள் மின்வாரியத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பதையும் அமைச்சர்  தெளிவுபடுத்தினால் நல்லது.

– வணக்கம் இந்தியா

From around the web