லாக்-அப் மரணம் என்றால் என்ன? அமைச்சர் கடம்பூர் ராஜு சொல்லும் விளக்கத்தைக் கேளுங்க!

தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம் வியாபாரிகள் இருவர், போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு நள்ளிரவு தாண்டியும் அடித்து உதைக்கப்பட்டுள்ளனர். பின்னர் அங்கிருந்து இரண்டு மணி நேரம் பயணம் செய்து கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட்டிடம் ஆஜர் படுத்தி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்துள்ளனர். பின்னர் இருவரும் அடுத்தடுத்த மரணமடைந்துள்ளதாக மருத்துவமனையில் அறிவிக்கப்பட்டது. கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைப்பதற்கு முன்பு சோதனை செய்த மருத்துவர் இருவருடைய பின்புறங்களிலும், கால்களிலும் காயங்கள் இருந்துள்ளதை உறுதிபடுத்தியுள்ளார். போலீசார் அடித்ததினாலும் உடனடியாக சிகிச்சை அளிக்காததாலுமே இருவரும் இறந்து
 

லாக்-அப் மரணம் என்றால் என்ன? அமைச்சர் கடம்பூர் ராஜு சொல்லும் விளக்கத்தைக் கேளுங்க!தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம் வியாபாரிகள் இருவர், போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு நள்ளிரவு தாண்டியும் அடித்து உதைக்கப்பட்டுள்ளனர். பின்னர் அங்கிருந்து இரண்டு மணி நேரம் பயணம் செய்து கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட்டிடம் ஆஜர் படுத்தி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்துள்ளனர். பின்னர் இருவரும் அடுத்தடுத்த மரணமடைந்துள்ளதாக மருத்துவமனையில் அறிவிக்கப்பட்டது.

கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைப்பதற்கு முன்பு சோதனை செய்த மருத்துவர் இருவருடைய பின்புறங்களிலும், கால்களிலும் காயங்கள் இருந்துள்ளதை உறுதிபடுத்தியுள்ளார். போலீசார் அடித்ததினாலும் உடனடியாக சிகிச்சை அளிக்காததாலுமே இருவரும் இறந்து போயுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தை “லாக்-அப் மரணம்” என்று கனிமொழி எம்.பி. அரசியல் செய்கிறார் என செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, லாக்-அப் மரணம் என்றால் என்ன என்று ஒரு விளக்கமும் அளித்துள்ளார்.

அந்த வீடியோ க்ளிப்பை ட்விட்டரில் பகிர்ந்து கேள்வி எழுப்பியுள்ளார் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் பேசியுள்ள வீடியோவில் அமைச்சர் கடம்பூர் ராஜு, “ லாக்-அப் டெத் என்பது காவல் நிலையத்திலேயே தாக்கப்பட்டு, அங்கேயே உயிரிழந்தால் தான் அதற்கு லாக்-அப் என்று பெயர்.

ஆனால் இந்த சம்பவம், காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டு, காவல் நிலையத்திலே இருந்து அவர்கள் மேஜிஸ்ட்ரேட் முன்பாக ஆஜர் செய்யப்பட்டு, அதற்குப் பிறகு கிளைச் சிறையில் அடைக்கப்பட்டு இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு, இரண்டு நாட்களுக்குப் பிறகு உயிரிழந்துள்ளனர்,” என்று கூறியுள்ளார்.

லாக்-அப் மரணம் குறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர் கடம்பூர் ராஜு, கிளைச் சிறையில் மருத்துவர்  சோதனையில் இருவருடைய பின்புறங்களிலும் கால்களிலும் காயம் இருந்து என்று கூறியதற்கு அமைச்சர் என்ன பதில் சொல்லப் போகிறாரோ தெரியவில்லை!

மேலும் தெற்கே உள்ள சாத்தான்குளத்திலிருந்து, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் மேஜிஸ்ட்ரேட்டுகளிடம் ஆஜர் படுத்தாமல், மாவட்டத் தலைநகரான தூத்துக்குடியிலும் ஆஜர் படுத்தாமல் இரண்டரை மணி நேரம் பயணித்து மாவட்டத்தின் வடக்கு எல்லையில் உள்ள மாஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜர் படுத்திய காரணத்தையும் அமைச்சர் கடம்பூர் ராஜு விவரிப்பாரா? என்ற கேள்வியும் எழுகிறது.

A1TamilNews.com

 

From around the web