வாஷிங்டனில் அமைச்சர் ஜெய்சங்கர்.. வர்த்தகப் பேச்சுவார்த்தை?

வாஷிங்டன்: இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளர் மைக் பாம்யோவை சந்தித்தார். மூன்று நாட்கள் பயணமாக அமெரிக்கா வந்துள்ள அமைச்சர் ஜெய்சங்கர் பாதுகாப்புத் துறைச் செயலாளர் மார்க் எஸ்பெர் மற்றும் தேசிய பாதுகாப்புச் ஆலோசகர் ராபர்ட் ஓ ப்ரெயனையும் சந்திக்க உள்ளார். இந்தியா – அமெரிக்கா இடையே நீடிக்கும் வர்த்தகப் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக இந்தப் பயணம் என்று கூறப்படுகிறது. ஜூன் மாதம் இந்தியாவுக்கான சிறப்பு வர்த்தக சலுகையை
 

வாஷிங்டனில் அமைச்சர் ஜெய்சங்கர்.. வர்த்தகப் பேச்சுவார்த்தை?

வாஷிங்டன்: இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளர் மைக் பாம்யோவை சந்தித்தார்.

மூன்று நாட்கள் பயணமாக அமெரிக்கா வந்துள்ள அமைச்சர் ஜெய்சங்கர் பாதுகாப்புத் துறைச் செயலாளர் மார்க் எஸ்பெர் மற்றும் தேசிய பாதுகாப்புச் ஆலோசகர் ராபர்ட் ஓ ப்ரெயனையும் சந்திக்க உள்ளார்.

இந்தியா – அமெரிக்கா இடையே நீடிக்கும் வர்த்தகப் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக இந்தப் பயணம் என்று கூறப்படுகிறது. ஜூன் மாதம் இந்தியாவுக்கான சிறப்பு வர்த்தக சலுகையை அமெரிக்கா நீக்கியது. அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் 28 பொருட்களுக்கு இறக்குமதி வரியை அதிகரித்தது இந்தியா. 

ஐ.நா சபை பொதுக்கூட்டத்தின் போது பிரதமர் மோடியும் அதிபர் ட்ரம்பும் சந்தித்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமெரிக்கா – இந்தியாவுக்கு இடையேயான வர்த்தகம் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் விரைவில் ஏற்படும் என்ரு அதிபர் ட்ரம்ப் கூறியிருந்தார்.

அதையொட்டி அமைச்சர் ஜெய்சங்கரின் வருகை  அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 

 

From around the web