டிக் டாக் செயலியுடன் மைக்ரோசாப்ட் ஒப்பந்தம் செய்ய முடியாது! பில் கேட்ஸ் விளக்கம்!

இந்தியா சீனா மோதலைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தும் பொருட்டு டிக்டாக் உட்பட 59 சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்தது. இதனையடுத்து அமெரிக்க அரசும் செப்டம்பர் 15ற்குள் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும் என தெரிவித்தது. இதைத் தவிர்க்குமாறு அமெரிக்காவிடம் அந்நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அமெரிக்காவில் உள்ள மைக்ரோசாப்ட் போன்ற ஏதாவது ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு டிக் டாக் செயலியை விற்பனை செய்ய வேண்டும் என்றும் இல்லையேல் டிக் டாக் செயலி அமெரிக்காவில் தடை
 

டிக் டாக்  செயலியுடன்  மைக்ரோசாப்ட் ஒப்பந்தம் செய்ய முடியாது! பில் கேட்ஸ் விளக்கம்!

ந்தியா சீனா மோதலைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தும் பொருட்டு டிக்டாக் உட்பட 59 சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்தது. இதனையடுத்து அமெரிக்க அரசும் செப்டம்பர் 15ற்குள் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும் என தெரிவித்தது. இதைத் தவிர்க்குமாறு அமெரிக்காவிடம் அந்நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள மைக்ரோசாப்ட் போன்ற ஏதாவது ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு டிக் டாக் செயலியை விற்பனை செய்ய வேண்டும் என்றும் இல்லையேல் டிக் டாக் செயலி அமெரிக்காவில் தடை செய்யப்படும் என்றும் அமெரிக்க அதிபர் அதிரடியாக தெரிவித்த்தார்.

இந்நிலையில் அமெரிக்க செயலியான டிவிட்டர் நிறுவனம் டிக்டாக்கை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. மைக்ரோ சாப்ட் நிறுவனம் வாங்கப்போவதாகவும் சில தகவல்கள் வெளிவந்தன.

டிக்டாக் உடன் ஒப்பந்தம் செய்தால் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு பாதிப்பு ஏற்படும் என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். டிக்டாக் உடன் செய்துகொள்ளும் ஒப்பந்தம் ஒரு விஷ கோப்பை என்றார். இந்த ஒப்பந்தத்தால் நடப்பதை எதையும் உறுதி செய்ய முடியாது என பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web