மெக்சிகோவில் ஜூலை 1ம் தேதி தேர்தல்.. 43 வேட்பாளர்கள் சுட்டுக் கொலை!

மெக்சிகோ சிட்டி: ஜூலை 1ம் தேதி மெக்சிகோவில் அதிபர் பதவி மற்றும் நாடாளுமன்றத்திற்கான 500 உறுப்பினர்கள், 100 செனட்டர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் மாநிலங்களுக்கான தேர்தலையும் சேர்த்து மொத்தம் 3400 பதவிகளுக்கு இந்த தேர்தல் நடைபெறுகிறது. அதிபர் பதவிக்கு நான்கு பேர் களத்தில் உள்ளார்கள். இவர்களில் முன்னணியில் இருப்பவர் சுயேட்சையாக போட்டியிடும் ஆண்ட்ரூஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் ஆவார். ஆளும் கட்சியின் ரிக்கார்டோ அனயா, ஹோசே அண்டோனியோ மீயதே, ஜெய்மி ரொட்ரிகஸ் ஆகிய மூவரும் போட்டியில்
 

மெக்சிகோவில் ஜூலை 1ம் தேதி தேர்தல்.. 43 வேட்பாளர்கள் சுட்டுக் கொலை!மெக்சிகோ சிட்டி: ஜூலை 1ம் தேதி மெக்சிகோவில் அதிபர் பதவி மற்றும் நாடாளுமன்றத்திற்கான 500 உறுப்பினர்கள், 100 செனட்டர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் மாநிலங்களுக்கான தேர்தலையும் சேர்த்து மொத்தம் 3400 பதவிகளுக்கு இந்த தேர்தல் நடைபெறுகிறது.

அதிபர் பதவிக்கு நான்கு பேர் களத்தில் உள்ளார்கள். இவர்களில் முன்னணியில் இருப்பவர் சுயேட்சையாக போட்டியிடும் ஆண்ட்ரூஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் ஆவார். ஆளும் கட்சியின் ரிக்கார்டோ அனயா, ஹோசே அண்டோனியோ மீயதே, ஜெய்மி ரொட்ரிகஸ் ஆகிய மூவரும் போட்டியில் உள்ளனர்.

இந்த நால்வருமே அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் ஒத்த கருத்து கொண்டவர்கள் இல்லை. சமீபத்தில் நடந்த விவாதத்தில், நால்வரும் ‘ட்ரம்ப்புடன் இணைந்து செயல்படுவோம். ஆனால் அவருடைய மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்ச மாட்டோம்’ என ஒருமித்த குரலில் கூறியுள்ளார்கள்.

அதிபர் பதவிக்கான தேர்தல் ஒரு புறம் அனல் பறக்கும் வேளையில், மாநில அளவிலான பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு உயிருக்கே உத்திரவாதம் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. உள்ளூர் மட்டத்தில் உள்ள கிரிமினல் க்ரூப்கள், வேட்பாளார்களை சுட்டு வீழ்த்துகிறார்கள்.
மெக்சிகோவில் ஜூலை 1ம் தேதி தேர்தல்.. 43 வேட்பாளர்கள் சுட்டுக் கொலை!
குறிப்பிட்ட வேட்பாளர்கள் பதவிக்கு வந்து விட்டால் தங்களுக்கு பிரச்சனை என்று நினைக்கும் கிரிமினல்கள், ஈவு இரக்கம் இல்லாமல் தேர்தலில் போட்டியிடுபவர்களை சுட்டுக் கொல்வதால், பலர் போட்டியிலிருந்து விலகி விட்டார்கள்

இது வரையிலும் மூன்று பெண் வேட்பாளர்கள் உட்பட 43 வேட்பாளர்கள் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார்கள். போட்டியிடாத அரசியல்வாதிகளையும் சேர்த்தால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 ஐ தாண்டுகிறது. இந்த கிரிமினல்களால் அதிபர் வேட்பாளர்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்பட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

ரத்தக் கறைகளுடன் மெக்சிகோ நாட்டின் மாபெரும் தேர்தல் ஜூலை 1ம் தேதி நடைபெற உள்ளது. மெக்சிகோவுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கெடுபிடி உச்சத்தில் இருக்கும் இந்த வேளையில் மெக்சிகோவின் புதிய அதிபருக்கு கடும் சவால்கள் காத்திருக்கிறது.

 

From around the web