மேற்குத் தொடர்ச்சி மலை விமர்சனம்

நடிகர்கள்: ஆன்டனி, காயத்ரி கிருஷ்ணா ஒளிப்பதிவு: தேனி ஈஸ்வர் இசை: இளையராஜா தயாரிப்பு: விஜய் சேதுபதி இயக்கம்: லெனின் பாரதி கமர்ஷியல் சினிமா, யதார்த்த சினிமா என்ற வரையறைகளில் சிக்கிக் கொள்ளாமல், ஒரு மனிதனின், அவன் சார்ந்த சமூகத்தின் வாழ்வியலை துளிகூட வணிக சமரசமில்லாமல் பதிவு செய்திருக்கிறார்கள், மேற்குத் தொடர்ச்சி மலையில். தமிழ் சினிமாவில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய, விருதுகளுக்கு அப்பாற்பட்ட படைப்பு என்றால் மிகையல்ல. பண்ணைப்புரம், கோம்பை, தேவாரம், குதிரைப் பாஞ்சான் மெட்டு என மேற்குத்
 

மேற்குத் தொடர்ச்சி மலை விமர்சனம்

டிகர்கள்: ஆன்டனி, காயத்ரி கிருஷ்ணா

ஒளிப்பதிவு: தேனி ஈஸ்வர்

இசை: இளையராஜா

தயாரிப்பு: விஜய் சேதுபதி

இயக்கம்: லெனின் பாரதி

கமர்ஷியல் சினிமா, யதார்த்த சினிமா என்ற வரையறைகளில் சிக்கிக் கொள்ளாமல், ஒரு மனிதனின், அவன் சார்ந்த சமூகத்தின் வாழ்வியலை துளிகூட வணிக சமரசமில்லாமல் பதிவு செய்திருக்கிறார்கள், மேற்குத் தொடர்ச்சி மலையில். தமிழ் சினிமாவில்
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய, விருதுகளுக்கு அப்பாற்பட்ட படைப்பு என்றால் மிகையல்ல.

மேற்குத் தொடர்ச்சி மலை விமர்சனம்

பண்ணைப்புரம், கோம்பை, தேவாரம், குதிரைப் பாஞ்சான் மெட்டு என மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் தொடங்கும் இந்தப் படம், சதுரங்கப் பாறை, தலையங்காவல் எனப் பயணித்து கடைசியி்ல் ஒரு காற்றாலை இறக்கையின் உச்சியில் முடிவது
போல மிக நேர்த்தியாகப் படமாக்கியிருக்கிறார்கள். ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் திருப்பங்களை இம்மி கூட சினிமாத்தனமில்லாமல் சொல்கிறது மேற்குத் தொடர்ச்சி மலை.

கூலித் தொழிலாளியாக இருக்கும் ஒருவன், தன் கடின உழைப்பால் ஒரு கையளவு நிலமாவது வாங்கி அதில் விவசாயம் செய்ய முயல்கிறான். ஆனால் அவனை இந்தச் சமூகம் அனுமதித்ததா? என்பதுதான் படத்தின் ஒருவரிக் கதை.

மேற்குத் தொடர்ச்சி மலை விமர்சனம்

நாற்பதுகளைக் கடந்த அத்தனைப் பேரும் இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தங்களை ஏதோ ஒரு விதத்தில் தொடர்புபடுத்திக் கொள்வார்கள். இளைஞர்கள் பலருக்கும் ‘அட.. நாமும் இப்படி ஒரு சூழலில் வாழாமல் போனோமே’ என ஏக்கம்
பிறக்கும்.

படத்தின் நாயகன் ரங்கசாமியாக வாழ்ந்திருக்கிறார் அதிகம் அறியப்படாத நடிகரான ஆன்டனி. அதற்குமேல் ஒரு வார்த்தை சொன்னாலும் அது நாடகத்தனமாகிவிடும்.

அவர் மனைவியாக காயத்ரி கிருஷ்ணா. மிகையில்லாத, கிராமத்துப் பெண்ணாக கலக்கி இருக்கிறார். மற்ற பாத்திரங்களில் வரும் பலரும் சினிமாவுக்கு சம்பந்தமில்லாதவர்கள், அந்தந்த ஊர் மக்கள்.

மேற்குத் தொடர்ச்சி மலை விமர்சனம்

படத்துக்கு மிகவும் உயிரோட்டமாக அமைந்திருப்பது இளையராஜா இசை. அவரது சொந்த ஊரின் கதை… அவர் பார்த்து வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கைப் பதிவு என்பதால், இயல்பாகவே அவரது முத்திரை படமெங்கும் தெரிகிறது. ‘கேட்காத வாத்தியம் கேட்குது
ஊரான ஊருக்குள்ள…’, ‘அந்தரத்தில் தொங்குதம்மா ஏழை வாழ்க்கை…’ போன்ற பாடல்கள் மனதை உருக்குகின்றன.

தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு படத்துக்கு இன்னொரு பெரும் பலம். மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரம் தொடங்கி அந்த மலைப் பி்ரதேசத்துக்குள் நம்மை இழுத்துக் கொள்கிறது.

மேற்குத் தொடர்ச்சி மலை விமர்சனம்

இயக்குநர் லெனின் பாரதி, தன் மண்ணையும் மக்களையுமே படத்தின் கருப்பொருளாக்கி முதல் படத்தைத் தந்திருக்கிறார். இந்தப் படம் வணிக ரீதியாக தனக்கு எந்த அளவு உதவும் என்பதையெல்லாம் யோசிக்காமல் இயக்குநருக்கு முழுமையாகத் துணை நின்றிருக்கிறார் தயாரிப்பாளர் விஜய் சேதுபதி. இருவருக்குமே கிரீடம் சூட்டியிருக்கிறது தமிழ் சினிமா. நல்ல படங்கள் நிச்சயம் தோற்பதில்லை!

Rating: 4.0/5.0

– வணக்கம் இந்தியா

From around the web