போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் பணிக்கு திரும்பாவிடில் பணிமுறிவு!

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்கள் மீது பணி முறிவு நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு, மருத்துவர் பணியிடங்களை குறைக்க கூடாது, மருத்துவ மேற்படிப்பில் இடஒதுக்கீடு, முறையான கலந்தாய்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரசு மருத்துவர்களில் ஒரு பிரிவினர் 6 வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு எழுத்துப்பூர்வ உறுதி அளித்த போதிலும் அவர்களது கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படாததே காலவரையற்ற போராட்டத்திற்கு காரணம் எனக் கூறும்
 

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் பணிக்கு திரும்பாவிடில் பணிமுறிவு!வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்கள் மீது பணி முறிவு நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு, மருத்துவர் பணியிடங்களை குறைக்க கூடாது, மருத்துவ மேற்படிப்பில் இடஒதுக்கீடு, முறையான கலந்தாய்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரசு மருத்துவர்களில் ஒரு பிரிவினர் 6 வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசு எழுத்துப்பூர்வ உறுதி அளித்த போதிலும் அவர்களது கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படாததே காலவரையற்ற போராட்டத்திற்கு காரணம் எனக் கூறும் மருத்துவர்கள், போராட்டத்தில் ஈடுபடாத மருத்து‌வர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

மருத்துவர்களின் இந்த போராட்டத்தால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 5 நாட்களாக பணிக்கு வராத மருத்துவர்கள் மீது பணி முறிவு நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை ஆணை பிறப்பித்துள்ளது.

பிரேக் இன் சர்வீஸ் எனப்படும் பணி முறிவு நடவடிக்கை எடுக்கப்பட்டால், மருத்துவர்கள் பணி மூப்பை இழப்பார்கள் என்றும், பணி மூப்பு மூலம் கிடைக்கும் அத்தனை சலுகைகளையும் போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்கள் இழக்க நேரிடும் என்றும் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

https://A1TamilNews.com

From around the web