மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’ தனுஷ்?

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது. கலைப்புலி தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிக்க உள்ளார்கள். கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அசுரன் படம் அக்டோபர் மாதம் 4ம் தேதி திரைக்கு வர உள்ளது. அடுத்ததாக சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், துரை செந்தில்குமார் இயக்கியுள்ள பட்டாஸ் படம் வெளியாக தயாராக உள்ளது. கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் படப்பிடிப்பும்
 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’ தனுஷ்?

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது. கலைப்புலி தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிக்க உள்ளார்கள்.

கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அசுரன் படம் அக்டோபர் மாதம் 4ம் தேதி திரைக்கு வர உள்ளது. அடுத்ததாக சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், துரை செந்தில்குமார் இயக்கியுள்ள பட்டாஸ் படம் வெளியாக தயாராக உள்ளது.

கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அடுத்த படமாக மீண்டும் கலைப்புலி தாணு தயாரிப்பில் தனுஷ் நடிக்க உள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’ தனுஷ்?

பரியேறும் பெருமாள் படத்தைப் பார்த்த உடனேயே மாரி செல்வராஜிடம் தனக்கு ஒரு படம் இயக்கித் தருமாறு கேட்டுள்ளார் தனுஷ். முன் தயாரிப்புப் பணிகள் முடிவடைந்து டிசம்பர் மாதம் படப்பிடிப்புக்கு செல்லத் தயாராக இருப்பதாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

பரியேறும் பெருமாள் படத்தைப் போலவே இதுவும் ஒரு முக்கியப் பிரச்சனையைப் பற்றியதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். தனுஷுக்கு ஜோடியாக மலையாள முன்னணி நடிகை ரஜிஷா விஜயன் நடிக்க உள்ளார். 

படத்திற்கு கர்ணன் என்று பெயர் வைக்கப்படலாம் என்று தெரிகிறது.

– வணக்கம் இந்தியா

From around the web