WHATSAPP VIDEO CALLING இனி ஒரே நேரத்தில் 8 பேருடன் பேசலாம்!

சர்வதேச அளவில் உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.உலகம் முழுவதும் மக்கள் வெளியே வரமுடியாமல் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதனால் பல்வேறு தொழில் நிறுவனங்களும் வீடுகளில் இருந்தபடியே பணிபுரிய தங்களது ஊழியர்களை அறிவுறுத்தியுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் அலுவலக செயல்பாடுகளுக்கும், உறவினர்கள் மற்றும் நண்பர்களை பார்த்து ,பேசிக்கொள்வதற்கும் வசதியாக வீடியோ கால் மூலம் நேரத்தை செலவிடுவது அதிகரித்து வருகிறது. சர்வதேச அளவில் குறுந்தகவல் செயலிகளில் முதன்மையானது
 

WHATSAPP VIDEO CALLING  இனி ஒரே நேரத்தில் 8 பேருடன் பேசலாம்!ர்வதேச அளவில் உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.உலகம் முழுவதும் மக்கள் வெளியே வரமுடியாமல் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதனால் பல்வேறு தொழில் நிறுவனங்களும் வீடுகளில் இருந்தபடியே பணிபுரிய தங்களது ஊழியர்களை அறிவுறுத்தியுள்ளது.

இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் அலுவலக செயல்பாடுகளுக்கும், உறவினர்கள் மற்றும் நண்பர்களை பார்த்து ,பேசிக்கொள்வதற்கும் வசதியாக வீடியோ கால் மூலம் நேரத்தை செலவிடுவது அதிகரித்து வருகிறது.

சர்வதேச அளவில் குறுந்தகவல் செயலிகளில் முதன்மையானது வாட்ஸ்அப். இந்தக் குறுந்தகவல் செயலியில் குறுந்தகவல்கள் மட்டுமின்றி க்ரூப் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் என பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.வாட்ஸ் அப் வீடியோ காலில் இதுவரை 4 பேர் மட்டுமே இணைய முடியும்.

தற்போது வாட்ஸ்அப் வீடியோ அழைப்பில் 8 பேர் வரை இணையும் புதிய சேவையை அறிமுகப்படுத்தியிருக்கிறது. பேஸ்புக்குடன் இணைந்த பிறகு பல்வேறு புதிய சேவைகளை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் தற்போது வீடியோ அழைப்பில் 8 பேர் வரை உரையாடலாம் என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வாட்ஸ் அப் பயனர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சேவை அடுத்த வாரம் முதல் செயல்படத் தொடங்கும் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

A1TamilNews.com

From around the web