மகாத்மா காந்தி 150வது பிறந்தநாள்…. 150 ரூபாய் நாணயம் வெளியிட்டார் பிரதமர்!

அகமதாபாத்: மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 150 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். டெல்லி ராஜ்கோட்டில் மகாத்மா காந்திக்கு மலர் தூவி மரியாதை செய்த பிரதமர், விமானம் மூலம் அகமதாபாத் வந்தார். அங்கு சபர்மதி ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்ற பிரதமர், அருங்காட்சியத்தைச் சுற்றிப் பார்த்தார். வருகைப் பதிவேட்டில் பதிவிட்ட பிரதமர் “ மகாத்மா காந்தியின் தூய்மையான இந்தியா கனவை நிறைவேற்றிய மகிழ்ச்சியில் இருக்கிறேன். இந்த ஆசிரமத்தில் இருக்கும் இந்த
 

மகாத்மா காந்தி 150வது பிறந்தநாள்…. 150 ரூபாய் நாணயம் வெளியிட்டார் பிரதமர்!

அகமதாபாத்: மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 150 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.

டெல்லி ராஜ்கோட்டில் மகாத்மா காந்திக்கு மலர் தூவி மரியாதை செய்த பிரதமர், விமானம் மூலம் அகமதாபாத் வந்தார். அங்கு சபர்மதி ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்ற பிரதமர், அருங்காட்சியத்தைச் சுற்றிப் பார்த்தார்.

வருகைப் பதிவேட்டில் பதிவிட்ட பிரதமர் “ மகாத்மா காந்தியின் தூய்மையான இந்தியா கனவை நிறைவேற்றிய மகிழ்ச்சியில் இருக்கிறேன்.  இந்த ஆசிரமத்தில் இருக்கும் இந்த தருணத்தில், இந்தியாவில் திறந்தவெளி கழிப்பறைகளை யாரும் உபயோகிக்காத நிலையை உருவாக்கியதற்காக மகிழ்ச்சி அடைகிறேன்,” என்று எழுதியுள்ளார்.

மகாத்மா காந்தி 150வது பிறந்தநாள்…. 150 ரூபாய் நாணயம் வெளியிட்டார் பிரதமர்!

பின்னர் நடைபெற்ற தூய்மை இந்தியா விழாவில் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் நினைவாக 150 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி. உடன் குஜராத் முதல்வர் விஜய் ருபானியும் இருந்தார். 

தூய்மை இந்தியாவில் பேசிய பிரதமர்,” உலகில் உள்ள எல்லாப் பிரச்சனைகளுக்கும் மகாத்மா காந்தியின் கொள்கைகள் தீர்வாக உள்ளன. உலக அளவில் இந்தியாவின் மரியாதை உயர்ந்துள்ளது. உலக மாற்றங்களில் இந்தியா முன்னணியில் இருக்கிறது,” என்று குறிப்பிட்டார்.

– வணக்கம் இந்தியா

From around the web