வெளிநாட்டு விமானங்களை நிறுத்தாது யார்? குஜராத் மாடலில் 6.7 சதவீத கொரோனா நோயாளிகள் மரணம்!அதிரடி குற்றச்சாட்டுகள்!!

இந்தியாவிலேயே கொரோனா தொற்று மிக அதிகமாக உள்ள மாநிலமாக மஹாராஷ்ட்ராவும் அதன் தலைநகர் மும்பையும் உருவெடுத்துள்ளது. இந்நிலையில் வெளிநாட்டு விமானங்களை தடை செய்யாததால் தான் மும்பையில் கொரோனா தொற்று அதிகமாகியுள்ளதாக மஹாராஷ்ட்ரா எரிசக்தி துறை அமைச்சர் நிதின் ராவத் குற்றம் சாட்டியுள்ளார். “இந்தியாவில் கொரோனா தொற்று ஜனவரி 31ம் தேதியே கண்டுபிடிக்கப்பட்டது. பிப்ரவரி 12ம் தேதியே ராகுல் காந்தி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடு்க்கப்பட வேண்டும் என்று கூறினார். ஆனால் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல்,
 

வெளிநாட்டு விமானங்களை நிறுத்தாது யார்? குஜராத் மாடலில் 6.7 சதவீத கொரோனா நோயாளிகள் மரணம்!அதிரடி குற்றச்சாட்டுகள்!!இந்தியாவிலேயே கொரோனா தொற்று மிக அதிகமாக உள்ள மாநிலமாக மஹாராஷ்ட்ராவும் அதன் தலைநகர் மும்பையும் உருவெடுத்துள்ளது. இந்நிலையில் வெளிநாட்டு விமானங்களை தடை செய்யாததால் தான் மும்பையில் கொரோனா தொற்று அதிகமாகியுள்ளதாக மஹாராஷ்ட்ரா எரிசக்தி துறை அமைச்சர் நிதின் ராவத் குற்றம் சாட்டியுள்ளார்.

“இந்தியாவில் கொரோனா தொற்று ஜனவரி 31ம் தேதியே கண்டுபிடிக்கப்பட்டது. பிப்ரவரி 12ம் தேதியே ராகுல் காந்தி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடு்க்கப்பட வேண்டும் என்று கூறினார். ஆனால் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், வெளிநாட்டு விமானங்களை மும்பைக்கு இயக்கியது.அதன் மூலம் தான் மும்பையில் கொரோனா தொற்று அதிகமாக பரவி விட்டது. 

ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்னதாக இரண்டு மூன்று நாட்கள் அவகாசம் கொடுத்திருந்தால், வெளிமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குத் திரும்பிப் போயிருப்பார்கள். பிரச்சினைகளும் குறைந்திருக்கும். ஆனால் பிரதமர் இதைச் செய்யவில்லை.

கொரோனாவினால் மும்பையில் உயிரிழப்பு அதிகம் என்று பாஜகவினர் பரப்புரை செய்கிறார்கள். மும்பையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 2.7 சதவீதம் மட்டுமே உயிரிழக்க நேரிட்டுள்ளது. குஜராத்தின் அகமதாபாத் நகரில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 6.7 சதவீதம் பேர் உயிரிழக்கிறார்கள். குஜராத் மாடல் தான் மேம்படுத்தப்பட வேண்டியது,” என்று அமைச்சர் நிதின் ராவத் குற்றம் சாட்டியுள்ளார்.

விமானப் பயணிகளை ஏற்றிச் செல்லும் டாக்சி ட்ரைவர்கள், ஹோட்டல் ஊழியர்கள், விமான நிலைய ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டு அது மற்றவர்களுக்கும் பரவ நேரிடுகிறது என்பது உலகம் முழுவதும் நடைபெற்றுள்ளது. உலகில் மிகவும் அதிகமாக பாதிப்பு ஏற்பட்ட அமெரிக்காவின் நியூயார்க் உலகின் அனைத்து நாடுகளுடனும் விமான சேவையில் இணைக்கப்பட்டுள்ள நகரமாகும்.

இந்தியாவின் நியூயார்க் ஆக விளங்கும் மும்பையிலும் அதே போன்று கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதில் வியப்பில்லை.  வெளிநாட்டு விமான சேவைகளை பிப்ரவரி மாதத்திலேயே நிறுத்தி இருந்தால், இந்தியாவில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்திருக்கும் என்பதே பொதுவான கருத்தாகும்.

A1TamilNews.com

 

From around the web