10 ரூபாய்க்கு மலிவு விலை உணவு! சிவசேனா தேர்தல் அறிக்கை !!

மும்பை: ஏழைகளின் பசியைப் போக்க மாநிலம் முழுவதும் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படும் என சிவசேனா தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறும் நிலையில் அதற்கான அறிக்கையை சிவசேன கட்சி வெளியிட்டுள்ளது. கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, அவரது மகனும் ஒர்லி தொகுதி வேட்பாளருமான ஆதித்ய தாக்கரே மற்றும் பிரியங்கா திரிவேதி உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். விவசாயிகளின் நலனுக்காக ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என
 

10 ரூபாய்க்கு மலிவு விலை உணவு! சிவசேனா தேர்தல் அறிக்கை !!மும்பை: ஏழைகளின் பசியைப் போக்க மாநிலம் முழுவதும் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படும் என சிவசேனா தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறும் நிலையில் அதற்கான அறிக்கையை சிவசேன கட்சி வெளியிட்டுள்ளது. கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, அவரது மகனும் ஒர்லி தொகுதி வேட்பாளருமான ஆதித்ய தாக்கரே மற்றும் பிரியங்கா திரிவேதி உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

விவசாயிகளின் நலனுக்காக ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழைகளின் பசியைப் போக்கும் வகையில் ஆயிரம் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படும் எனவும் அங்கு ஒரு வேளை உணவு 10 ரூபாய்க்கு விற்கப்படும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் சிவசேனா கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் முதன் முதலில் ஏழைகளுக்காக மலிவு விலையில்  ‘அம்மா’ உணவகங்களை அறிமுகப்படுத்தியது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்பது குறிப்பிடத் தக்கது.

-வணக்கம் இந்தியா

From around the web