மகாமுனி விமர்சனம்

நடிகர்கள்: ஆர்யா, இந்துஜா, மகிமா, இளவரசு, ஜெயப்பிரகாஷ் ஒளிப்பதிவு: அருண் பத்மநாபன் இசை: தமன் தயாரிப்பு: ஞானவேல் ராஜா எழுத்து – இயக்கம்: சாந்தகுமார் மௌனகுரு படம் தந்த சாந்தகுமார், கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகு தந்திருக்கும் படம் மகாமுனி. இத்தனை கால இடைவெளிக்கு ஒரு நியாயம் செய்வது மாதிரி ஒரு படத்தைத் தந்திருக்கும் அவரை முதலிலேயே பாராட்டிவிடுவோம். இரட்டை வேடக் கதை. ஒருத்தர் நல்லவர், இன்னொருவர் கெட்டவர் என வழக்கமான கதைக் போக்கு மாதிரி தெரிந்தாலும்,
 

மகாமுனி விமர்சனம்டிகர்கள்: ஆர்யா, இந்துஜா, மகிமா, இளவரசு, ஜெயப்பிரகாஷ்

ஒளிப்பதிவு: அருண் பத்மநாபன்

இசை: தமன்

தயாரிப்பு: ஞானவேல் ராஜா

எழுத்து – இயக்கம்: சாந்தகுமார்

மௌனகுரு படம் தந்த சாந்தகுமார், கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகு தந்திருக்கும் படம் மகாமுனி. இத்தனை கால இடைவெளிக்கு ஒரு நியாயம் செய்வது மாதிரி ஒரு படத்தைத் தந்திருக்கும் அவரை முதலிலேயே பாராட்டிவிடுவோம்.

இரட்டை வேடக் கதை. ஒருத்தர் நல்லவர், இன்னொருவர் கெட்டவர் என வழக்கமான கதைக் போக்கு மாதிரி தெரிந்தாலும், நேர்த்தியான திரைக்கதை, அழுத்தமான வசனங்களால் படம் க்ளாஸ் அந்தஸ்தைப் பெறுகிறது.

பொதுவாக முதல் படம் வெற்றிப் பெற்றதும், அந்த சென்டிமென்டை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அதே நடிகர்களை வைத்து அடுத்த படம் பண்ணுவார்கள். இயக்குநர் சாந்தகுமார் அதிலும் வித்தியாசம். மௌனகுருவில் நடித்த யாரும் மகாமுனியில் கிடையாது. அடுத்து,ஸ ஒவ்வொரு பாத்திர வடிவமைப்பிலும் அத்தனை நேர்த்தி, முழுமை.

மகாமுனி விமர்சனம்

கதைப்படி, மகா எனும் ஒரு ஆர்யா காஞ்சிபுரத்தில் வசிக்கும் டாக்சி டிரைவர். அரசியல்வாதி இளவரசுக்காக கூலிக்கு கொலை செய்யும் ஆசாமி. அவரை ஒரு கொலை வழக்கில் போலீஸ் தேடிக் கொண்டிருக்கிறது. மற்றொரு ஆர்யா முனி. இவர் ஈரோட்டில் வசிக்கும் பக்திமான். விதைப்பந்து வீசுதல், இயற்கை விவசாயம், ஏழைக் குழந்தைகளுக்கு ட்யூஷன் எடுப்பது என இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்பவர். இவரை மகிமா காதலிக்கிறார். ஆனால் இந்தக் காதலுக்கு மகிமாவின் அப்பா கடும் எதிர்ப்பு. ஆர்யாவைக் கொல்ல ஜெயப்பிரகாஷ் திட்டம் போட, அந்த நேரம் பார்த்து போலீசில் தப்பித்து கொலைகார ஆர்யா ஈரோட்டுப் பக்கம் வருகிறார். இதில் பக்திமான் ஆர்யாவை ரவுடி என நினைத்து போலீஸ் கைது செய்ய, பின்னர் என்ன நடக்கிறது என்பது மீதிக் கதை.

ஆர்யாவுக்கு இது மறுவாழ்வு தந்திருக்கும் படம் என்றால் மிகையல்ல. நான் கடவுள் படத்துக்குப் பிறகு, இந்தப் படத்தில் அந்த முனி பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் ஆர்யா. ரவுடி மகாவாகவும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்.

இந்த மாதிரிப் படங்களில் நாயகிகளை ஜஸ்ட் ஊறுகாயாக்கி தூக்கிப் போட்டுவிடுவார்கள். ஆனால் நாயகிகள் இந்துஜா, மகிமா இருவரையுமே மிகச் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

முனி ஆர்யா – மகிமாவின் காதல் ஒரு சுவாரஸ்யமான கவிதை மாதிரி மனசைத் தொடுகிறது.

மகாமுனி விமர்சனம்

இளவரசு, ஜெயப்பிரகாஷ் இருவருமே பிரமாதம். சினிமாத்தனம் இம்மியும் இல்லாத இயல்பான வில்லன்கள். வழக்கம்போல மனதில் நிற்கிறார் அருள்தாஸ்.

தமனிடம் கச்சிதமாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குநர். பின்னணி இசை அத்தனை பொருத்தமாக அமைந்திருக்கிறது. அருண் பத்மநாபனின் ஒளிப்பதிவு படத்தின் இன்னொரு ப்ளஸ்.

இடைவேளைக்குப் பிறகு படம் கொஞ்சம் இழுப்பதுபோலத் தெரிந்தாலும், அந்தப் பகுதியில்தான் சுவாரஸ்யமான திருப்பங்கள். இன்னும் விறுவிறுப்பாக்கியிருக்கலாம்.

ஆனாலும் மகாமுனி, ஒரு சுவாரஸ்யமான அனுபவம். வெல்டன் சாந்தகுமார்.

மதிப்பீடு 3.5/5.0

 

From around the web