காஷ்மீர் லடாக்கில் இப்படி ஒரு அதிசயமா?

லே: காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்து தற்போது யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ள லடாக்கில் கார்கள் தானாக ஓடும் அதிசயம் நடக்கிறது. லடாக்கில் லே என்ற ஒரு இடம் இருக்கிறது. இங்குள்ள ஒரு மலைப் பகுதி மேக்னட் ஹில், அதாவது காந்த மலை என்றழைக்கப்படுகிறது. அங்கே வரும் கார்களை கியர்களிலிருந்து நியூட்ரலுக்கு மாற்றி விட்டால், எஞ்சினை அணைத்த நிலையிலும் கார்கள் தானாக நகர்கிறது. 20 முதல் 30 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது. இதென்ன அதிசயம். மலைப்பகுதியில் சரிவாக இருக்கும்
 

லே: காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்து தற்போது யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ள லடாக்கில் கார்கள் தானாக ஓடும் அதிசயம் நடக்கிறது. 

லடாக்கில் லே என்ற ஒரு இடம் இருக்கிறது. இங்குள்ள ஒரு மலைப் பகுதி மேக்னட் ஹில், அதாவது காந்த மலை என்றழைக்கப்படுகிறது.

அங்கே வரும் கார்களை கியர்களிலிருந்து நியூட்ரலுக்கு மாற்றி விட்டால், எஞ்சினை அணைத்த நிலையிலும் கார்கள் தானாக நகர்கிறது. 20 முதல் 30 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது.

இதென்ன அதிசயம். மலைப்பகுதியில் சரிவாக இருக்கும் இடத்தில் எந்தக் காரும் நியூட்ரலில் வேகமெடுத்துச் செல்லும் என்கிறீர்களா? அப்படிச் செல்லும் கார்கள் பள்ளமான பகுதியை நோக்கி மட்டும் தானே செல்லும். இங்கே இரண்டு பக்கமும் அதே வேகத்தில் ஓடுகிறதே! 

இணைப்பில் உள்ள வீடியோவைப் பாருங்கள்.

குறிப்பிட்ட இடத்தில் காந்த ஈர்ப்பு தன்மை அதிகமாக உள்ளதால் இவ்வாறாக நடைபெறுவதாக கூறப்படுகிறது. இது உண்மை தானா அல்லது மாயையா என்றும் கேள்விகள் எழாமல் இல்லை. ஆனால், உலகச் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கும் இடமாக மேக்னட் ஹில் இப்பொழுது மாறியுள்ளது.

– வணக்கம் இந்தியா

From around the web