கொரோனாவுக்கு சித்த வைத்தியப் பொடியை ஏன் ஆய்வு செய்ய வில்லை?ஆங்கில மருத்துவம் இயற்கை மருத்துவத்தை அழித்து விடுமோ? உயர்நீதிமன்ற நீதிபதிகள் அச்சம்!!

ஆங்கில மருத்துவ வியாபார யுக்தி மற்றும் லாப நோக்கம் இயற்கை மருத்துவத்தை அழித்து விடுமோ என்ற அச்சம் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கவலை தெரிவித்துள்ளனர். கொரோனா சிகிச்சைக்கு 66 மூலிகைகள் கொண்ட கசாயப் பொடி தயாரித்துள்ளதாகவும், இந்த மருந்தை ஆய்வுக்கு மத்திய மாநில அரசுகள் எடுத்துக் கொள்ளவில்லை என்றும் சித்த மருத்துவர் சுப்பிரமணியன், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு அளித்து இருந்தார். இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு தாரர்
 

கொரோனாவுக்கு சித்த வைத்தியப் பொடியை ஏன் ஆய்வு செய்ய வில்லை?ஆங்கில மருத்துவம் இயற்கை மருத்துவத்தை அழித்து விடுமோ? உயர்நீதிமன்ற நீதிபதிகள் அச்சம்!!ஆங்கில மருத்துவ வியாபார யுக்தி மற்றும் லாப நோக்கம் இயற்கை மருத்துவத்தை அழித்து விடுமோ என்ற அச்சம் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கொரோனா சிகிச்சைக்கு 66 மூலிகைகள் கொண்ட கசாயப் பொடி தயாரித்துள்ளதாகவும், இந்த மருந்தை ஆய்வுக்கு மத்திய மாநில அரசுகள் எடுத்துக் கொள்ளவில்லை என்றும்  சித்த மருத்துவர் சுப்பிரமணியன், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு அளித்து இருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு தாரர் சித்த மருத்துவர் சுப்பிரமணியன், ” தான் தயாரித்துள்ள 66 மூலிகைகள் கொண்ட  கசாயப் பொடியை தண்ணீரில் கொதிக்க வைத்து , தினமும் இரு வேளை சாப்பிடுவதற்கு முன்பு குடித்து வந்தால் கொரோனா நோயிலிருந்து விடுபடலாம். இதனால் எந்த தீங்கும் ஏற்படாது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சீனாவில் பாரம்பரிய மருத்துவம் தான் கொரோனாவை கட்டுப்படுத்த உதவியது.

இந்த கசாயப் பொடி மருந்தை நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்தக் கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அளித்தேன். இது வரை அனுமதி கிடைக்கவில்லை. கொரோனாவை குணப்படுத்தும் சித்த மருந்தான மூலிகைப் பொடியை நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்த அனுமதி வழங்க வேண்டும்,” என்று கோரியிருந்தார்.

மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி, “சுபசுரக் குடிநீர், நிலவேம்பு கசாயம் எந்த அடிப்படையில் பரிந்துரை செய்யப்பட்டது. சுபசுரக் குடிநீர் கொரோனா தொற்றுக்கு கொடுக்கலாம் என ஆய்வு செய்யப்பட்டதா?. கொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்ற அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது?. மருத்துவக் காப்பீட்டுத் தொகைக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடும் போது இது போன்ற புதிய மருந்துகளை பரிசோதிப்பதில் அரசுக்கு என்ன தயக்கம்? என்று சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

ஆங்கில மருத்துவ வியாபார யுத்திகள் மற்றும் லாப நோக்கம் இயற்கை மருத்துவத்தை அழித்துவிடுமோ என்றும் அச்சம் தெரிவித்துள்ளனர் நீதிபதிகள்!. வழக்கு விசாரணையை செவ்வாய்கிழமை(22-6-2020)க்கு ஒத்தி வைத்த நீதிபதிகள் மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

சித்த மருத்துவப் பல்கலைக் கழகம் அமைத்துள்ள தமிழக அரசுக்கு, அறிவியல் பூர்வமாக சித்த மருந்துகளை சோதனை செய்வதில்  உண்மையிலேயே தயக்கம் இருக்கிறதா? அல்லது நீதிபதிகள் குறிப்பிட்டது போல் ஆங்கில மருத்துவ லாப நோக்கத்தால், ஏதாவது அழுத்தம் தரப்படுகிறதா? என்ற கேள்விகள் சாமானியர்களுக்கும் எழுகின்றன!

A1TamilNews.com

From around the web