சட்டத்தின் ஆட்சியா? குற்றத்தின் ஆட்சியா? – மு.க.ஸ்டாலின் கேள்வி!

சென்னை: திருட்டுத்தனமாக மணல் அள்ளிய லாரிகளை பிடித்த போலீசாரை மிரட்டியுள்ள சம்பவம் குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மிகவும் காட்டமான கேள்விகளை எழுப்பியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் அருகே மேலக்கோட்டையூரில் உள்ள குளத்தில், திருட்டுத்தனமாக மண் அள்ளப்பட்டு வந்ததாக புகார் வந்துள்ளது. அங்கு விரைந்து சென்ற போலீசார், சட்டவிரோதமாக மண் எடுத்துக்கொண்டிருந்த மூன்று லாரிகளைப் பிடித்து தாழம்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவல் நிலையத்திற்கு வந்த ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் போலீசாரை மிரட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து மணல் லாரிகளைப்
 

சட்டத்தின் ஆட்சியா? குற்றத்தின் ஆட்சியா? – மு.க.ஸ்டாலின் கேள்வி!

சென்னை:  திருட்டுத்தனமாக மணல் அள்ளிய லாரிகளை பிடித்த போலீசாரை மிரட்டியுள்ள சம்பவம் குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மிகவும் காட்டமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் அருகே  மேலக்கோட்டையூரில் உள்ள குளத்தில்,  திருட்டுத்தனமாக மண் அள்ளப்பட்டு வந்ததாக புகார் வந்துள்ளது.  அங்கு விரைந்து சென்ற போலீசார், சட்டவிரோதமாக மண் எடுத்துக்கொண்டிருந்த மூன்று லாரிகளைப் பிடித்து தாழம்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காவல் நிலையத்திற்கு வந்த ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் போலீசாரை மிரட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து மணல் லாரிகளைப் பறிமுதல் செய்த போலீசார் ராஜ்குமார்,  புருஷேத்தமன், இளையராஜா ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து மு.க.ஸ்டாலின் காட்டமான கேள்வி எழுப்பியுள்ளார்.

“இது எடப்பாடி பழனிசாமியின் லாரி என மிரட்டும் அளவுக்கு, சமூக விரோதிகள் நடமாட்டத்துக்கு முதலமைச்சர் பெயரைப் பயன்படுத்துவது போன்ற அராஜகம் வேறு என்ன இருக்க முடியும்? ஆட்சி – எடப்பாடியின் கையிலா? மணல் கொள்ளையர்கள் கையிலா? தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? குற்றத்தின் ஆட்சியா?” என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

– வணக்கம் இந்தியா

From around the web