முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா? – மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை!

சென்னை: ஒரு வார காலத்திற்குள் வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து பெறப்பட்டுள்ள முதலீடுகளை வெள்ளை அறிக்கையாக வெளியிட்டால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தத் தயார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அமெரிக்காவில் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் உறுதியளித்த 220 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்து தொழில்களை தொடங்கியுள்ளார் என்று கூறியிருந்தார். முதலீடுகள் பற்றி வெள்ளை அறிக்கை வேண்டும் என்று ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். வெளிநாட்டுப் பயணம் முடிந்து சென்னை திரும்பிய
 

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா? – மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை!சென்னை:  ஒரு வார காலத்திற்குள் வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து பெறப்பட்டுள்ள முதலீடுகளை வெள்ளை அறிக்கையாக வெளியிட்டால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தத் தயார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் உறுதியளித்த 220 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்து தொழில்களை தொடங்கியுள்ளார் என்று கூறியிருந்தார். முதலீடுகள் பற்றி வெள்ளை அறிக்கை வேண்டும் என்று ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

வெளிநாட்டுப் பயணம் முடிந்து சென்னை திரும்பிய முதலமைச்சர், ஸ்டாலின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கையில், “பொறாமையில் பேசுகிறார்” என்று கூறியிருந்தார். முதலமைச்சருக்கு பதிலளித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

“வெளிநாடுகளின் முதலீடுகளைப் பெறப் போகிறோம் என்று சொல்லி வீராப்புடன் சென்று வெறுங்கையுடன் திரும்பியிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமி, பயணம் மனரீதியாக ஏற்படுத்தியுள்ள கோணலால், விரக்தியின் உச்சத்திற்கே சென்று, “ஸ்டாலின் தான் நினைத்ததை நடத்த முடியாத காரணத்தால் என் மீது எரிச்சலும், பொறாமையும் கொண்டு பேசி வருகிறார்” எனப் பேட்டியளித்திருப்பது, “பாடத் தெரியாமல் பக்க வாத்தியத்தில் குறை” கூறியது போன்ற பைத்தியக்காரத்தனமானது.

முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமிக்கு தைரியம் இருந்தால், “அதிமுக ஆட்சியில் இதுவரை போடப்பட்டுள்ள 443 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி எத்தனைக் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் பெறப்பட்டுள்ளன; அந்த முதலீடுகள் மூலம் தொடங்கப்பட்டு – செயல்படும் தொழிற் நிறுவனங்கள் எத்தனை; அந்நிறுவனங்கள் மூலம் எத்தனை ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கித்தரப்பட்டன என்பதையெல்லாம் விரிவான வெள்ளை அறிக்கையாக உருவாக்கி, இதோ பிடியுங்கள் நீங்கள் கேட்கும் வெள்ளை அறிக்கை” என்று வெளியிடத் தயாரா?

அப்படி உண்மைகளை வெளியிட்டால், ஒரு வாரத்தில் முதலமைச்சருக்கு தி.மு.க. சார்பில் ‘பாராட்டு விழா’ நடத்தத் தயாராக இருக்கிறேன். என் சவாலை முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமி ஏற்றுக் கொள்ளத் தயாரா?,” என்று மு.க.ஸ்டாலின் அறிக்கையில் கூறியுள்ளார்.

– வணக்கம் இந்தியா

From around the web