தமிழுக்கு ஆபத்து.. தமிழில் பெயர் வையுங்கள் – மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

சிவகாசி: திமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின், குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்குமாறு பெற்றோர்களை வலியுறுத்தியுள்ளார். மணமக்களை வாழ்த்திப் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ”தமிழ் மொழிக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தாய்மொழிக்கு கேடு என்ற நிலை ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் பெயர் சூட்டிட வேண்டும். தமிழ் மொழியை பாதுகாப்பது நம் அனைவரின் கடமை,” என்று கூறியுள்ளார். ரயில்வே தேர்வு, தபால் துறை தேர்வு உட்பட மத்திய
 

தமிழுக்கு ஆபத்து.. தமிழில் பெயர் வையுங்கள் – மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

சிவகாசி: திமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின், குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்குமாறு பெற்றோர்களை வலியுறுத்தியுள்ளார்.

மணமக்களை வாழ்த்திப் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,

”தமிழ் மொழிக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.  தாய்மொழிக்கு கேடு என்ற நிலை ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் பெயர் சூட்டிட வேண்டும். தமிழ் மொழியை பாதுகாப்பது நம் அனைவரின் கடமை,” என்று கூறியுள்ளார்.

ரயில்வே தேர்வு, தபால் துறை தேர்வு உட்பட மத்திய அரசுப் பணியிடங்களுக்கு இந்தியில் மட்டுமே தேர்வு என்ற அறிவிப்புகளைத் தொடர்ந்து பாராளுமன்றத்திலும், தமிழ்நாட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த சூழ்நிலைகளைத் தான் மு.க.ஸ்டாலின் சுட்டிக் காட்டி தமிழ் மொழிக்கு ஆபத்து என்று குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது.

முன்னதாக, மற்றொரு திருமண விழாவில் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகனும், தமிழில் குழந்தைகளுக்கு பெயர் வைக்க வேண்டும் என்று கூறினார். திமுகவினரின் குடும்பத்திலேயே வடமொழி பெயர்கள் வைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, இனிமேல் தமிழில் பெயர் வையுங்கள் என்று துரைமுருகனும் கேட்டுக் கொண்டார்.

மீண்டும் தமிழ்ப் பெயர்களுக்கு பெற்றோர்கள் மத்தியில் ஆதரவு கிடைக்குமா?

– வணக்கம் இந்தியா

From around the web