பொண்டாட்டி பொசசிவ்வா இல்லேன்னா லைஃப் போர் அடிச்சிடும் சார்!

ஆஹா தமிழில் இந்த விஷயத்திற்கு எவ்வளவு அழகாக பெயரிட்டுள்ளார்கள்,” என வியப்பதைப் போலவே, “ச்சே… இதற்கு தமிழில் அழகான வார்த்தை இல்லையே,” என்றும் சில விஷயங்களுக்கு வருந்தியிருக்கிறேன். அதில் ஒரு விஷயம் possessiveness என்கிற வார்த்தை/உணர்வு. பலர் இதை சந்தேகம் என மொழி பெயர்க்கிறார்கள். ஆனால் தமிழில் சொல்வதானால் ‘தனக்கு மட்டுமே சொந்தம் என்கின்ற எண்ணம்,’ என ஏறக்குறைய சரியான வாக்கியமாகத்தான் மொழிபெயர்க்க முடியுமே தவிர சரிநிகரான வார்த்தை ஒன்றுமில்லை. பொதுவாக காதலர்களிடையே possessivenessயினால் விளையும் சண்டைகள் பலவற்றைப்
 

பொண்டாட்டி பொசசிவ்வா இல்லேன்னா லைஃப் போர் அடிச்சிடும் சார்!

பொண்டாட்டி பொசசிவ்வா இல்லேன்னா லைஃப் போர் அடிச்சிடும் சார்!ஆஹா தமிழில் இந்த விஷயத்திற்கு எவ்வளவு அழகாக பெயரிட்டுள்ளார்கள்,” என வியப்பதைப் போலவே, “ச்சே… இதற்கு தமிழில் அழகான வார்த்தை இல்லையே,” என்றும் சில விஷயங்களுக்கு வருந்தியிருக்கிறேன். அதில் ஒரு விஷயம் possessiveness என்கிற வார்த்தை/உணர்வு.

பலர் இதை சந்தேகம் என மொழி பெயர்க்கிறார்கள். ஆனால் தமிழில் சொல்வதானால் ‘தனக்கு மட்டுமே சொந்தம் என்கின்ற எண்ணம்,’ என ஏறக்குறைய சரியான வாக்கியமாகத்தான் மொழிபெயர்க்க முடியுமே தவிர சரிநிகரான வார்த்தை ஒன்றுமில்லை. பொதுவாக காதலர்களிடையே possessivenessயினால் விளையும் சண்டைகள் பலவற்றைப் பார்த்திருக்கிறேன். ‘எதுக்கு அவன் உன்கிட்ட எப்பப் பாத்தாலும் பேசிட்டே இருக்கான்?’ காதலன் கேட்டால் பல பெண்கள் உடனே, ‘சந்தேகப்படுறியா?’ என பதிலுக்குக் கேட்பார்கள். காதலிகள் கேட்கும் சமயங்களில் ஆண்களும் இப்படியேதான் பதில் அளிப்பார்கள்.

ஆனால் possessivenessயின் அர்த்தத்தை சந்தேகம் என்ற எதிர்மறையான வார்த்தைக்குள் அடக்கினால் அது காதல் எனும் பிரம்மாண்டமான நேர்மறை உணர்விற்குச் செய்யும் மிகப்பெரிய துரோகம். காதலில் இருக்கும் எண்ணிலடங்கா நல்லுணர்வுகளில் முக்கியமான ஒன்று possessiveness. கல்லூரி காலத்தில் என் காதலிக்கு அவளது வகுப்பில் படிக்கும் ஒரு நல்லவன் அநியாயத்திற்கு உதவியாக இருப்பான். குறிப்பாக நான் நேரமின்மையால் செய்ய முடியாமல் போகும் சின்னச் சின்ன உதவிகளை எல்லாம் ஆளுக்கு முன்னால் வந்து செய்துகொடுப்பான்.

அவன் எல்லோருக்கும் உதவினாலும் பரவாயில்லை. இவளுக்கு மட்டுமே உதவுவான். எனக்கோ எரிச்சலாக வரும். ஒருமுறை அவளிடம் இதுபற்றி கேட்டபோது அவளும், “சந்தேகப்படுறியா?” எனக் கேட்டாள். அன்றிலிருந்து நான் அவள் யாருடன் என்ன பேசினாலும் கஷ்டப்பட்டு கண்டு கொள்வதில்லை. ஒருகட்டத்தில் அதுவே பழகி “Do whatever. I don’t give a shit,” என்ற நிலைக்கு எனக்கே தெரியாமல் போய் காதலும் கடைசியில் காணாமல் போய்விட்டது.

பிறகு இந்த possessiveness ஆனது காதலில் எவ்வளவு முக்கியத்துவமுடையதாக இருக்கிறது என்பதை உணர எனக்கு பல்லாண்டுகள் தேவைப்பட்டது. Possessiveness இல்லாத காதல்தான் மிகவும் மேன்மையான காதல், நம்பிக்கை மிகுந்த காதல் என்றெல்லாம் நம்மூரில் பலர் அளப்பார்கள். சிங்கம் திரைப்படத்தில், ‘பொண்டாட்டி பொசசிவ்வா இல்லேன்னா லைஃப் போர் அடிச்சிருக்கும் சார்’ என ஹரி அழகாக எழுதியிருப்பார்.

ஒருமுறை ஜோசஃப் ராய் ஃப்ரட்ரிக்சுடன் பேசிக் கொண்டிருந்தபோது, ‘என் காதலி யாருடன் வேண்டுமானால் பேசட்டும், யார் வேண்டுமானாலும் அவளுடன் பேசட்டும் எனக்கென்ன என்று நீ இருந்தால் நீ மிகவும் நல்லவன் என்றோ, அது உண்மையான காதல் என்றோ அர்த்தமில்லை. அந்த உறவைப் பற்றி அலட்டிக்கொள்ள உனக்கு பெரிதாக எதுவுமே இல்லை என்றும், அந்த உறவில் இன்னமும் காதல் இருக்கிறதா என நீ மறுபரிசீலனை செய்ய வேண்டிய தருணம் வந்துவிட்டது என்றும் பொருள்’ என்றார்

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், சில பெண்கள் வேறு ஆண்களுடன் சாதாரணமாகப் பேசும்போதுகூட தங்கள் கணவர் பார்த்துவிடுவாரோ என பயந்து நடுங்குவார்கள். கேட்டால் ’என் வீட்டுக்காரர் கொஞ்சம் பொசசிவ்’ என்பார்கள். அதாவது சைக்கோக்களும் இதே வார்த்தையை வசதிக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதனால்தான் இந்த வார்த்தை அநியாயமாக இவ்வளவு அவப்பெயரையும் சம்பாதித்திருக்கிறது போல.

இந்த உணர்வு கயிற்றில் நடப்பதைப் போன்ற ஆபத்தான ஒன்று. சற்றுமுன் நண்பன் ஒருவனிடம் இதுபற்றிப் பேசியபோது நான் சொன்னது இதுதான். பொசசிவ்னெஸ் என்பது காதலில் மட்டுமல்ல, தந்தை-மகள், அம்மா-மகன், அம்மா-மகள், அண்ணன்-தம்பி என எல்லா உறவுகளிலுமே உண்டு. அது இறந்துவிட்டால் உறவும் தானாகவே இறந்துவிடும்.

அல்லது உறவைக் கொல்ல வேண்டுமென்றால் எப்போதெல்லாம் பொசசிவ்னெஸ் வருகிறதோ அப்போதெல்லாம் அதை அடக்கி வைத்து சொல்லாமல் விட்டாலே போதும். உறவு தானாகவே பட்டுப்போய் உதிர்ந்துவிடும்.

-டான் அசோக்

A1TamilNews.com

From around the web