லண்டன் டூ சிட்னி … உலகின் தொலைதூர விமான சேவை!

உலகின் நீண்டதூர விமான சேவை லண்டன் நகரிலிருந்து சிட்னிக்கு இயக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் கோண்டஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்த சேவையை தொடர்ந்து இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போயிங் 787 – 9 ட்ரீம்லைனர் ரக விமானம் லண்டன் ஹுத்ரு விமானநிலையத்திலிருந்து வியாழக்கிழமை காலையில் புறப்பட்டது. ஆஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை மதியம் 12:30 மணிக்கு இந்த விமானம் வந்து சேர்ந்தது. 19 மணி 30 நிமிடங்கள் பயணித்து ஆஸ்திரேலியா வந்தடைந்த இந்த விமானம் பயணித்த தூரம் 17 ஆயிரத்து
 

லண்டன் டூ சிட்னி … உலகின் தொலைதூர விமான சேவை!லகின் நீண்டதூர விமான சேவை லண்டன் நகரிலிருந்து சிட்னிக்கு இயக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் கோண்டஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்த சேவையை தொடர்ந்து இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போயிங் 787 – 9 ட்ரீம்லைனர் ரக விமானம் லண்டன் ஹுத்ரு விமானநிலையத்திலிருந்து வியாழக்கிழமை காலையில் புறப்பட்டது. ஆஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை மதியம் 12:30 மணிக்கு இந்த விமானம் வந்து சேர்ந்தது. 19 மணி 30 நிமிடங்கள் பயணித்து ஆஸ்திரேலியா வந்தடைந்த இந்த விமானம் பயணித்த தூரம் 17 ஆயிரத்து 800 கிலோ மீட்டர்கள் ஆகும்.  

கடந்த மாதம் நியூயார்க் நகரத்திலிருந்து சிட்னிக்கு நேரடி விமான சேவையை கோண்டஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் இயக்கியது. 19 மணி நேரம் 16 நிமிடங்கள் பயணித்தது அந்த விமானம். அடுத்த மாதம் நியூயார்க்- சிட்னிக்கு இன்னுமொரு சேவையை இயக்க உள்ளார்கள்.

ஆஸ்திரேலியாவின் கிழக்கே உள்ள சிட்னி, பிரிஸ்பேன் நகரங்களிலிருந்து லண்டன், நியூயார்க் நகரங்களுக்கு நேரடி விமான சேவை வழங்குவதற்காக கோண்டஸ் ஏர்லைன்ஸ் இந்த சோதனை சேவைகளை இயக்கியுள்ளது. விரைவில் நாள்தோறும் இந்த நகரங்களுக்கு நேரடி விமான சேவையை தொடங்க கோண்டஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அமெரிக்காவின் சிகாகோ, நியூயார்க் நகரங்களிலிருந்து இந்தியாவின் டெல்லி, மும்பை நகரங்களுக்கு நேரடி விமான சேவைகள் இயக்கப்படுகிறது. உலகிலேயே நீண்டதூரம் பயணிக்கும் விமான சேவை என்ற பெருமையை லண்டன் – சிட்னி விமான சேவை பெற்றுள்ளது.

https://www.A1TamilNews.com

From around the web