முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு லண்டன் தமிழர்கள் வரவேற்பு!

லண்டன்: 14 நாட்கள் மூன்று நாடுகள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, லண்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர். நீண்ட காலத்திற்குப் பிறகு தமிழக முதல்வர் ஒருவர் வெளிநாடுகளுக்குச் சென்று முதலீட்டாளர்களை சந்திக்க முயற்சிகள் எடுத்துள்ளது, வெளிநாடு வாழ் தமிழர்களிடையே உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. அண்டை மாநிலமான ஆந்திராவின் முதல்வர்கள் ஆண்டு தோறும் ஒரு முறையேனும் அமெரிக்கா வந்து முதலீட்டாளர்களை சந்திப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். ஆட்சி மாறினாலும் அவர்களின் இந்த முயற்சி மாறுவதில்லை. ஆந்திராவின்
 

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு லண்டன் தமிழர்கள் வரவேற்பு!லண்டன்: 14 நாட்கள் மூன்று நாடுகள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, லண்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர்.

நீண்ட காலத்திற்குப் பிறகு தமிழக முதல்வர் ஒருவர் வெளிநாடுகளுக்குச் சென்று முதலீட்டாளர்களை சந்திக்க முயற்சிகள் எடுத்துள்ளது, வெளிநாடு வாழ் தமிழர்களிடையே உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

அண்டை மாநிலமான ஆந்திராவின் முதல்வர்கள் ஆண்டு தோறும் ஒரு முறையேனும் அமெரிக்கா வந்து முதலீட்டாளர்களை சந்திப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். ஆட்சி மாறினாலும் அவர்களின் இந்த முயற்சி மாறுவதில்லை. ஆந்திராவின் சிஇஒ என்று தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டு அமெரிக்கா வந்த சந்திரபாபு நாயுடுவின் முயற்சியால் தான் மைக்ரோசாப்ட், ஆரக்கிள் உள்ளிட்ட பெரும் ஐடி நிறுவனங்கள் ஐதராபாத்துக்கு வந்தன.

புதிய ஆந்திர முதல்வர் ஜெகன் ரெட்டியும் பதவியேற்ற சூட்டோடு அமெரிக்காவில் ஒரு சுற்றுப் பயணம் முடித்து திரும்பியுள்ளார். தமிழ்நாட்டு முதல்வரையோ, அமைச்சர்களையோ வெளிநாட்டு வாழ் தமிழர்களால் தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலையே இருந்து வந்தது. அதை மாற்றும் விதமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வருகை அமையும் என்று பரவலான கருத்துகள் எழுந்துள்ளன.

பல கருத்து வேறுபாடுகளை தள்ளி வைத்து, தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வெளிநாடு வாழ் தமிழர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர். லண்டனுக்கு வந்து இறங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு லண்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். தமிழர்கள் சார்பில் சில கோரிக்கைகளை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு லண்டன் தமிழர்கள் வரவேற்பு!

இங்கிலாந்தில் முதற்கட்டப் பயணத்தை முடித்துக் கொண்டு, செப்டம்பர்1ம் தேதி அமெரிக்கா புறப்படுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 

தொடர்புடைய செய்தி :

இபிஎஸ் 2.0 – லண்டனில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அசத்தல்!

From around the web