பூஜை அறையில் கடைப்பிடிக்க வேண்டிய சின்னஞ்சிறு விஷயங்கள்!!

அன்றாடம் வீட்டில் விளக்கேற்றி பூஜை செய்பவர்களுக்கு சில சந்தேகங்கள் மனதில் உண்டு. சரியான முறைப்படி சாமி கும்பிடுகிறோமா, பூஜை குறைவில்லாமல் செய்கிறோமா என்பதில் ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் பதிவு இது. பூஜை செய்யும் போது வெற்றிலையின் நுனியை கிள்ளக்கூடாது. வெற்றிலை பாக்குடன் சுண்ணாம்பு சேர்க்கக் கூடாது. வாழைப் பழத்தை காம்புடன் கடவுளுக்கு நைவேத்தியம் செய்ய வேண்டும். காம்பில்லாத வாழைப்பழத்தை தவிர்த்தல் நலம் பயக்கும். நாட்டுப் வாழைப் பழமாக இருப்பின் இன்னும் சிறப்பு. வாழைப்பழம் தவிர்த்து மாதுளை,
 

பூஜை அறையில்  கடைப்பிடிக்க வேண்டிய சின்னஞ்சிறு விஷயங்கள்!!அன்றாடம் வீட்டில் விளக்கேற்றி பூஜை செய்பவர்களுக்கு சில சந்தேகங்கள் மனதில் உண்டு. சரியான முறைப்படி சாமி கும்பிடுகிறோமா, பூஜை குறைவில்லாமல் செய்கிறோமா என்பதில் ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் பதிவு இது.
பூஜை செய்யும் போது வெற்றிலையின் நுனியை கிள்ளக்கூடாது. வெற்றிலை பாக்குடன் சுண்ணாம்பு சேர்க்கக் கூடாது.

வாழைப் பழத்தை காம்புடன் கடவுளுக்கு நைவேத்தியம் செய்ய வேண்டும். காம்பில்லாத வாழைப்பழத்தை தவிர்த்தல் நலம் பயக்கும். நாட்டுப் வாழைப் பழமாக இருப்பின் இன்னும் சிறப்பு. வாழைப்பழம் தவிர்த்து மாதுளை, கொய்யா, வாழை பழம், இலந்தை பழம், விளாம்பழம், மாம்பழம் போன்ற பழங்களை பூஜைக்கு வைக்கலாம்.

தேங்காயை உடைக்கும் போது குடுமியுடன் உடைத்துவிட்டு தான், பின்பு குடுமியை எடுக்க வேண்டும். தேங்காய் உடைக்கும் போது இரண்டு பக்கமும் சீராக உடைப்பது நல்லது.

தினசரி தூப, தீப ஆரத்தி சமர்ப்பிக்க வேண்டும். சாம்பிராணி தூபம் போட்டு இறைவனை வழிபடுவது மிகவும் சிறந்தது. தூப, தீப ஆரத்திக்குப் பிறகே பிரசாத நைவேத்தியம் படைக்க வேண்டும். வீட்டில் செய்யப்படும் பலகாரங்கள் பச்சரிசியிலேயே செய்யப்பட வேண்டும்.

சமைக்க முடியாத நேரத்தில் கற்கண்டு, அவல்பொரி, சர்க்கரை இவற்றை வைத்து பூஜையை நிறைவு செய்யலாம். விநாயகருக்கு அருகம்புல்லும், பெருமாளுக்கு துளசியும் துர்க்கைக்கு அரளி பூவும் ,சிவபெருமானுக்கு வில்வம், கொன்றை, தும்பை, ஊமத்தைப் பூவும் சாற்றி வழிபடலாம்.

மல்லி, சாமந்தி, பன்னீர் ரோஜா, ரோஜா, சங்குப் பூ, தாமரை, மரிக்கொழுந்து, துளசி ஆகிய வாசம் உள்ள பூக்களையே சாமிக்கு வைக்க வேண்டும். அர்ச்சனை செய்யும்போது முழுமையான பூக்களால் மட்டுமே அர்ச்சனை செய்ய வேண்டும். ரோஜாப்பூவின் இதழ்களைக் கிள்ளியோ, சாமந்தி பூவில் இருந்து அதன் இதழ்களை கிள்ளியோ பூஜை செய்யக் கூடாது.

A1TamilNews.com

From around the web