டாஸ்மாக்கைப் போலவே தமிழகம் முழுவதும் சலூன் கடைகளிலும் அலைமோதிய கூட்டம்!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே31ம் தேதி வரை நான்காவது கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நான்காவது கட்ட ஊரடங்கில் பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. முடிதிருத்துவோர் சங்கத்தின் சார்பில் சலூன் கடைகளை திறக்க கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனைக் கருத்தில் கொண்டு தற்போது 50 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருக்கும் சலூன் கடைகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை நீங்கலாக மற்ற பகுதிகளில்
 

டாஸ்மாக்கைப் போலவே தமிழகம் முழுவதும் சலூன் கடைகளிலும் அலைமோதிய கூட்டம்!கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே31ம் தேதி வரை நான்காவது கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நான்காவது கட்ட ஊரடங்கில் பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

முடிதிருத்துவோர் சங்கத்தின் சார்பில் சலூன் கடைகளை திறக்க கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனைக் கருத்தில் கொண்டு தற்போது 50 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருக்கும் சலூன் கடைகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை நீங்கலாக மற்ற பகுதிகளில் கடைகளைத் திறக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநகராட்சி, பேருராட்சி பகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை கடைகளைத் திறந்து கொள்ளலாம் எனவும் முடிதிருத்தும் தொழிலாளி முகக்கவசம் அணிந்திருத்தல் அவசியம் எனவும் தினமும் கடையை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையைத் தவிர்த்த தமிழகத்தின் பிற பகுதிகளில் சலூன் கடைகளில் பொதுமக்கள் 50 நாட்கள் அவஸ்தைக்கு முடிவு கட்டும் விதமாக காலையில் இருந்தே திரள ஆரம்பித்தனர்.

A1TamilNews.com

From around the web