சானிடைஸர், முகக் கவசங்களை அதிக விலைக்கு விற்றால் லைசென்ஸ் ரத்து !

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வைரஸ் தொற்றை தடுக்க உதவி புரியும் சானிடைசர், முகக்கவசங்கள் இவற்றை அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் சேர்க்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்வது, பதுக்குவது நிரூபிக்கப்பட்டால் கடையின் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும். காலவரையின்றி கடைகள் சீல் வைக்கப்படும். சானிடைசர், முகக்கவசங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே விற்பனை செய்யப்பட வேண்டும்.
 

சானிடைஸர், முகக் கவசங்களை அதிக விலைக்கு விற்றால் லைசென்ஸ் ரத்து !கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வைரஸ் தொற்றை தடுக்க உதவி புரியும் சானிடைசர், முகக்கவசங்கள் இவற்றை அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் சேர்க்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்வது, பதுக்குவது நிரூபிக்கப்பட்டால் கடையின் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும். காலவரையின்றி கடைகள் சீல் வைக்கப்படும். சானிடைசர், முகக்கவசங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே விற்பனை செய்யப்பட வேண்டும்.

குறிப்பிட்ட விலைக்கு மேல் விற்பனை செய்த 40 மருந்துக்கடைகள், விநியோகஸ்தர்களின் உரிமம் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளது.

இரண்டு துணிமடிப்பு கொண்ட முகக் கவசத்தின் விலை 8 ரூபாய், மூன்று துணிமடிப்பு கொண்ட முகக் கவசத்தின் விலை 10 ரூபாய்,பாலித்தீன் சுற்றப்பட்ட முகக் கவசத்தின் விலை 16 ரூபாய் 200 மிலி சானிடைஸர் விலை 100 ரூபாய் குற்றம் நிரூபிக்கப் பட்டவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சிவில் சப்ளை சிஐடி கட்டுப்பாட்டறை மூலம் 044-24338972 என்ற எண்ணிலும் புகார்கள் அளிக்கலாம் என்று அக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

A1TamilNews.com

From around the web